
ரூ.500 கோடி வசூலைக் கடந்த திரிஷ்யம் 3
தற்போது 500 கோடி ரூபாய் மொத்த வசூலையும், 300 கோடி ரூபாய் நிகர வசூலையும் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வரலாற்று சாதனையை முறியடித்த முடிவு, உங்களது அன்புக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
படம் வெளியான நாளிலிருந்து அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு எதையும் வெளியிடாமல் இருந்தவர்கள் 500 கோடி வசூலைக் கடந்த பின்பே வசூல் அறிப்பை வெளியிட்டுள்ளார்கள்.
அஜய் தேவ்கன் நடித்து இதுவரையில் வெளிவந்த படங்களில் முதல் முறையாக 500 கோடி வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது. 2026ம் ஆண்டில் இதுவரையில் வெளியான ஹிந்திப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. திரிஷ்யம் படத்தின் முந்தைய இரண்டு பாகங்களை விடவும் இந்த மூன்றாவது பாகமே அதிக வசூலைக் குவித்துள்ளது. இவையெல்லாம்தான் இந்தப் படம் புரிந்துள்ள வசூல் சாதனைகள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!