ஹிந்தி திரிஷ்யம் 3 : முதல் நாளில் சாதனை வசூல்
அக் 03, 2026
Advertisement
அபிஷேப் பதக் இயக்கத்தில், அஜய் தேவ்கன், இஷிதா தத்தா, ஸ்ரேயா, தபு மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ஹிந்தித் திரைப்படம் "திரிஷ்யம் - தி கன்குலுஷன்".
2022ல் வெளிவந்த ஹிந்தி "திரிஷ்யம் 2" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள மூன்றாவது பாகப் படம் இது. இந்த வருடம் வெளிவந்த மலையாளப் படமான "திரிஷ்யம் 3" படத்தின் கதைக்கும் இந்த ஹிந்திப் படத்தின் கதைக்கும் எந்தத் தொடர்புமில்லை.
முதல் நாள் வசூலாக இந்தியாவில் சுமார் 80 கோடியும், வெளிநாடுகளில் சுமார் 15 கோடியும் என மொத்தமாக 95 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தியில் இதுவரையில் வெளிவந்த படங்களில் முதல் நாள் வசூலில் "துரந்தர் 2" படம் 99 கோடி நிகர வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. "திரிஷ்யம் 3" படம் 66 கோடி வசூலைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். "ஜவான்" படத்தை விடவும் 50 லட்சத்திற்கும் கூடுதலாக வசூலித்துள்ளதாம்.
இந்த வார இறுதிக்குள்ளாக இப்படம் 200 கோடி வசூலைக் கடக்கும் என்கிறார்கள். தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான வசூல் தொகையை இதுவரை வெளியிடவில்லை.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!