
ரூ.250 கோடி வசூலைக் கடந்த ஹிந்தி திரிஷ்யம் 3
2026ல் அஜய் தேவ்கன் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த "தமால் 4" படம் 200 கோடி வசூலைக் கடந்திருந்தது. அதற்கடுத்து தற்போது "த்ரிஷ்யம் 3" படமும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. ஹிந்தித் திரையுலகத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் வெளியான படங்களில் 200 கோடி வசூலைக் கடந்த 8வது படமாக இப்படம் உள்ளது.
அஜய் தேவ்கன் படங்களின் வசூலைப் பொறுத்தவரையில் இதற்கு முன்பு வெளிவந்த, “ரெய்டு 2, சிங்கம் அகய்ன், ஷைத்தான், திரிஷ்யம் 2, கங்குபாய் கத்தியவாடி, தன்ஹாஜி, டோட்டல் தமால், கோல்மால் அகய்ன்,” ஆகிய படங்கள் 200 கோடி வசூலைக் கடந்துள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…