விஜய் 69 படத்தில் ட்ரையத்லான் வீரராக நடிக்கும் அனுபம் கெர்
மே 05, 2023
Advertisement
நடிகர் விஜய்யின் 68வது படமே இன்னும் முடியவில்லை. இதை யார் இயக்குகிறார்கள் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.. இந்த நிலையில் விஜய் 69 வது படத்தில் பாலிவுட் அனுபம் கெர் நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகியிருப்பதால் விஜய் ரசிகர்களில் பலரும் குழம்பித்தான் போயிருக்கிறார்கள். ஆனால் இது விஜய் படம் பற்றிய தகவல் இல்லை.. பாலிவுட் சீனியர் நடிகரான அனுபம் கெர் கதையின் நாயகனாக நடித்துவரும் "விஜய் 69" என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள படத்தைப் பற்றிய செய்தி இது.
69 வயதான அனுபம் கெர் இந்த படத்தில் ஒரு ட்ரையத்லான் வீரராக நடித்துள்ளார். இது அவர் நடிக்கும் 537வது படமாக உருவாகியுள்ளது. சாதிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக 69 வயதிலும் ட்ரையத்லான் போட்டிகளில் கலந்து கொண்டு சாதிக்கும் ஒரு முதியவரை பற்றிய படமாக இது உருவாகியுள்ளது. இந்த படம் நேரடியாகவே ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!