திரிஷ்யம் : தி கன்க்ளூஷன் டிரைலர் வெளியானது
செப் 11, 2026
Advertisement
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகியுள்ள "திரிஷ்யம் : தி கன்க்ளூஷன்" படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மூன்று பாகங்களாக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தபடம் தெலுங்கு, ஹிந்தியிலும் ரீமேக் ஆனது. ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் இதுவரை இருபாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. இப்போது மூன்றாம் பாகம் "திரிஷ்யம் : தி கன்க்ளூஷன்" என்ற பெயரில் உருவாகி உள்ளது.
அபிஷேக் பதக் இயக்கும் இப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அஜய் தேவ்கன் மீண்டும் புகழ்பெற்ற விஜய் சல்கோங்கர் கதாபாத்திரத்தில் வருகிறார். ஹிந்தி "திரிஷ்யம் 2" படம் எங்கு நிறைவடைந்ததோ, அங்கிருந்து மூன்றாம் பாக கதை தொடர்கிறது. புதிய கதை மற்றும் முற்றிலும் புதிய திரைக்கதையுடன் இந்தபடம் விறுவிறுப்பான புதிய தளத்திற்குக் கொண்டு செல்லும் என டிரைலரை பார்க்கையில் புரிகிறது. பழைய ரகசியங்கள் வெளிவருதல் மற்றும் புதிய சிக்கல்கள் என ஒவ்வொரு நகர்வும் ஒரு விறுவிறுப்பான படத்தை தரும் என டிரைலர் பிரதிபலிக்கிறது.
படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. வருகிற அக்டோபர் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!