விமர்சனம்
புதுமுக ஹீரோ விகாஸ், மனநிலை மாறுவதற்கு முன் ஒரு நடிப்பும், மனநிலை மாறிய பின் ஒரு நடிப்பும் காட்டி இரண்டிலுமே பாஸ்மார்க் வாங்கி விடுகிறார். ஹீரோயின் சோனியா சூரியின் நடிப்பை விட க்ளைமாக்ஸில் அவரது முடிவு பதற வைப்பதுடன், எந்தவொரு காதலுக்கும் இப்படியொரு நிலை வரக்கூடாது என்று ரசிகர்களை சொல்ல வைக்கிறது.
விகாஸ், சோனியா சூரி தவிர பாண்டு, காதல் சுகுமார் உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால் காதல் இருக்கும் அளவு, காமெடி இல்லாதது மைனஸ். வழக்கம்போல் ஹீரோயினின் அப்பா காதலுக்கு வில்லனாகிறார் என்பது தவிர, எதிர்பராத திருப்பங்கள், நினைத்துக் கூட பார்க்கமுடியாத க்ளைமாக்ஸ் இவற்றால் நேசி படத்தை நேசிக்க வைத்திருக்கும் இயக்குனர் சரவண கிருஷ்ணாவிற்கு, சிற்பியின் இசை சரியாக கைகொடுத்துள்ளது.
நேசி : காதலை எதிர்க்கும் பெற்றோர்களை யோசிக்க வைக்கும்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!