கதைச் சுருக்கம்
அ நிறம் | அளவு
தனது நாத்தனார் திருமணத்துக்காக, கணவரின் கிராமத்துக்கு வருகிறார் சமந்தா. காதல் திருமணம் செய்த அவருக்கு சமையல் தெரியவில்லை. குடும்ப பழக்க வழக்கங்கள் தெரியவில்லை என்று அந்த குடும்பத்தினர் கிண்டல் செய்கிறார். அதை அப்பாவியாக சமாளிக்கிறார். அப்போது அவரை கொல்ல, அந்த குடும்பத்தினரை அழிக்க ஒரு டீம் வருகிறது. அப்ப சமந்தா அப்பாவி அல்ல, ஒரு காலத்தில் நக்சலைட்டாக இருந்தவர் என்ற உண்மை குடும்பத்தினருக்கு தெரிய வருகிறது. அப்புறமென்ன, வில்லன்களுடன் அதிரடியாக சண்டைபோட்டு குடும்பத்தை எப்படி காப்பாற்றினார் சமந்தா என்பது கிளைமாக்ஸ். நந்தினி ரெட்டி இயக்கியிருக்கிறார். தெலுங்கில் மா இன்டி பங்காரம் என்ற பெயரில் உருவாக்கி தமிழில் எங்கள் தங்கம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர்.
ஒருவரியில் கதையை சொல்ல வேண்டுமென்றால் சமந்தாவை ஆக் ஷன் ஹீரோயின் ஆக்கும் கதை. அவரே சொந்தமாக தயாரித்து இருக்கிறார். அதனால், அவருக்கே படம் முழுக்க முக்கியத்துவம், அவரை சுற்றியே கதை நடக்கிறது. சமந்தா கணவராக திகந்த் மஞ்சாலே வருகிறார். அவரும் டம்மி. பிரபல வில்லன் குல்ஷன் தேவய்யா கூட சமந்தாவிடம் அடி வாங்கி துடிக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துமுள்ள இந்த கதையின் முதற்பாதியில் பக்கா ஹோம்லியாக, ரொம்பவே அப்பாவியாக, மாமியார், குடும்பத்தினருக்கு பயப்படுவராக வருகிறார் சமந்தா. பிற்பாதியில் ஆக் ஷன் அவதாராம் எடுத்து எதிரிகளை பந்தாடுகிறார். இந்த இரண்டு இடங்களிலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவர் சமையல் செய்யும் தந்திரம், குடும்ப உறுப்பினர் அன்பை பெற துடிக்கும் இடங்கள் ஓகே. அந்த இடங்களில் ஹோம்லியாக, கியூட் ஆக இருக்கிறார்.
ஒரு கார் பைட்டில் இருந்து அவரின் ஆக் ஷன் அவதாரம் தொடங்குகிறது. குடும்பத்தினரை காப்பாற்றும் அந்த கார் சேசிங், சமந்தாவின் வீரம் அருமை. பிற்பாதியில் இன்னும் சில சண்டைகள். அதிலும் சமந்தா கலக்குகிறார். துப்பாக்கி, கத்தி, அரிவாள், சமையல் கரண்டியால் கூட சண்டை போடுகிறார். அந்த இடங்கள் சமந்தா ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆனால் பழைய காதல் காட்சி புகழ் சமந்தாவை நினைத்து செல்பவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.
சமந்தா சொந்த படம் என்றாலும் ஆக் ஷன் தவிர அவருக்கு வேறு அழுத்தமான காட்சி இல்லை, கணவராக வருபவருக்கும், அவருக்குமான கெமிஸ்ட்ரி செட்டாகவில்லை. விஜயசாந்தி மாதிரி பைட் பண்ண ஆசைப்பட்டு இருக்கிறார். ஒரு சில இடங்கள் ஓகே. மற்ற சண்டைக்காட்சிகள் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம், சில சண்டைக்காட்சிகளில் காமெடியை புகுத்தி அதை சுமார் ஆக்கியிருப்பதும் மைனஸ். படத்தின் பெரிய பிளஸ் அந்த பெரிய வீட்டில் ரொம்ப நேரம் நடக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. அதை இருட்டில் எடுத்து இருக்கிறார்கள். அதை இன்னும் ஜனரஞ்சகமாக எடுத்து இருந்தால் பிளாஸ்ட் மாதிரி எங்கள் தங்கமும் பேசப்பட்டு இருக்கும்.
சமந்தா தவிர, படத்தில் மற்றவர்களுக்கு நடிக்க வாய்ப்பு இல்லை. மாமியராக வரும் கவுதமிவுக்கும் சில டயலாக் மட்டுமே. மாமனார் ஆனந்த் கம்பீரமாக இருக்கிறார். வில்லன் குல்ஷன் தேவய்யா எதையோ செய்யப் போகிறார், பரபரப்பாக ஆகப்போகிறது என நினைத்தால் அவர் சமந்தாவை மறைமுகமாக புகழ்ந்து கொண்டே, அடியாட்களை அனுப்பி கொண்டே கடைசியில் களம் இறங்கி செத்துபோகிறார். காந்தாரா 2 படத்தில் மன்னராக கலக்கிய அவரை இயக்குனர் சரியாக பயன்படுத்தவில்லை. குறிப்பாக அவர் சம்பந்தப்பட்ட இரண்டாம் பாதி படத்தின் பெரிய மைனஸ்.
பிளாஷ்பேக்கில் சமந்தா யார்? அவர் எப்படி நக்சல் ஆனார் என்பதை சொல்கிறார்கள். அது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தஇடங்கள் திரைக்கதையில் இன்னும் வீக். அதேபோல், வில்லன், சமந்தாவுக்கு குரு, சிஷ்யன் என்ற உறவை காண்பித்து, வேறு மாதிரி கதையை நகர்த்தி இருக்கிறார். அதிலும் விறுவிறுப்பு இல்லை. சமந்தா மாமனார் அரசியல் சீன் பல படங்களில் பார்த்தது.
குடும்ப உறுப்பினர்கள் சீன் கள், சமையல், ஈகோ சீன் பெண்களுக்கு பிடிக்கும். சமந்தா தோழியாக வரும் மஞ்சுஷா, மருமகள் ஸ்ரீமுகி நடிப்பு, அவரின் சமையல் சீன்கள் ரசிக்க வைக்கிறது.
பக்கா தெலுங்கு படமாக இருப்பதால் தமிழுடன் பல இடங்களில் ஒட்டவில்லை. தெலுங்கு டப்பிங் என்பதால் பெயர்கள், படத்தின் வரும் எழுத்து தெலுங்கில் இருப்பதும் அன்னியமாக தெரிகிறது. சமந்தாவின் ஆக் ஷன் அவதாரம் சுமாரான திரைக்கதை, நடிகர்களின் ஓவர் ஆக்டிங்கால் பெரிதாக ஜொலிக்கவில்லை. முதற்பாதியை விறுவிறுப்பாக எடுத்த சென்ற இயக்குனர், பிற்பாதியில் கிளைமாக்சில் கவனம் செலுத்தவில்லை.
எங்கள் தங்கம் - பெண்கள் ரசிப்பார்கள். பழைய சமந்தாவை நினைத்த செல்பவர்களுக்கு ஏமாற்றம் மிஞ்சும்

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!