2.5

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு - கரன் சி புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்
இயக்கம் - ரஞ்சித் ஜெயக்கொடி
இசை - சாம் சிஎஸ்
நடிப்பு - சந்தீப் கிஷன், கவுதம் மேனன், திவ்யான்ஷா கவுஷிக்
வெளியான தேதி - 3 பிப்ரவரி 2023
நேரம் - 2 மணி நேரம் 35 நிமிடம்
ரேட்டிங் - 2.5/5

'கேஜிஎப்' படத்தைப் பார்த்துவிட்டு ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது 'மைக்கேல்' குழுவினர். அந்தப் படம் போலவே தங்களது படத்தையும் கொடுக்க ஆசைப்பட்டு முயற்சித்திருக்கிறார்கள்.


தமிழில் 'புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்' படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்கியிருக்கிறார். தெலுங்கில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ள படம்.


'தாதா' கதை என்றாலே மும்பை தான் கதைக்களமாக இருக்கிறது. இந்தப் படத்திலும் அப்படியே. 90களில் நடக்கும் கதையாக இப்படத்தின் கதை அமைந்திருக்கிறது. மும்பையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் தாதாவான கவுதம் மேனன். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது உயிரைக் காப்பாற்றுகிற அனாதைச் சிறுவனை வளர்க்கும்படி தனது உதவியாளரிடம் சொல்கிறார். வளர்ந்து இளைஞனாகும் அந்த சிறுவன்தான் 'மைக்கேல்'. அக்கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். கவுதமை மீண்டும் கொல்ல முயற்சிக்கும் கும்பலிடமிருந்து மீண்டும் காப்பாற்றுகிறார் சந்தீப். தன்னைக் கொல்ல முயற்சித்தவரையும், அவரது மகளையும் கொல்லும் வேலையை சந்தீப்பிடம் கொடுக்கிறார் கவுதம். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

ஏற்கெனவே பல படங்களில் பார்த்த அதே தாதா மோதல் கதை தான் இதுவும். சமீபத்தில் கூட தமிழில் கவுதம் இயக்கிய 'வெந்து தணிந்தது காடு' படம் கூட இதே சாயலில்தான் இருக்கும். புதிதாக எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை இயக்குனர்.

ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார் சந்தீப் கிஷன். திவ்யன்ஷா கவுஷிக் மீது காதல் வந்ததும் கொஞ்சம் மாறுகிறார். சந்தீப், திவ்யன்ஷா இடையிலான காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. கவுதம் நடுத்தர வயது தாதாவாக நடித்திருக்கிறார்.

படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் தமிழ் டப்பிங்கிற்காக திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது. அவரது மனைவியாக வரலட்சுமி சரத்குமார். விஜய் சேதுபதி வரும் காட்சிகளில் சுருட்டு புகைத்துக் கொண்டே இருக்கிறார்.

படம் முழுவதும் வன்முறை விளையாடுகிறது. சர்வ சாதாரணமாக துப்பாக்கி எடுத்து கொலைகளைச் செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரும், ஸ்டண்ட் இயக்குனரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். சாம் சிஎஸ் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

வழக்கமான ஒரு தாதா கதை, அப்பா மகன் சென்டிமென்ட், அம்மா மகன் சென்டிமென்ட், பழி வாங்கல் என பார்த்தவற்றையே மீண்டும் கொடுத்திருக்கிறார்கள்.

'மாஸ்' காட்ட முயற்சித்த 'மைக்கேல்'...

 

மைக்கேல் தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

மைக்கேல்

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓