விமர்சனம்
மாதவ் ஜாவாக அர்ஜூன் கபூர். நடிப்பில் அர்ஜூன் இன்னும் வளர வேண்டும். பீகார் மொழியில் அவர் பேசுவது எல்லாம் சுத்தமாக எடுபடவில்லை.
ரியாவாக ஸ்ரத்தா கபூர். முந்தைய படங்களில் இருந்த அசத்தல் நடிப்பு இந்தப்படத்தில் கொஞ்சம் கம்மி என்று தான் எண்ண தோன்றுகிறது. நிறைய இடங்களில் அவரது எக்ஸ்பிரஸன் ஒர்க்-அவுட்டாகவில்லை.
ஹாப் கேர்ள்பிரண்ட் நாவலை தழுவி படத்தை இயக்கியுள்ள மோகித் சூரி, கதை மற்றும் திரைக்கதையில் நிறைய கோட்டை விட்டுள்ளார். மேலும் படம் மெதுவாக நகருவதும், ரசிகர்களை கவராத வசனங்களுக்கும் படத்திற்கு பலவீனம்.
படத்தின் பெரிய பிளஸே இசை தான். ராகுல் மிஸ்ரா, ராஜூ சிங் ஆகியோருடன் இணைந்து மிதுன், தனிஷ்க் பாகி, அமி மிஸ்ரா உள்ளிட்ட பல இசையமைத்திருப்பதால் என்னவோ படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு ரகமாகவும், பின்னணி இசை இதமாகவும் அமைந்துள்ளன. விஷ்ணு ராவ்வின் ஒளிப்பதிவு ஓவியம், அதற்கேற்ற தேவேந்திர மர்தேஸ்வரின் படத்தொகுப்பும் பக்காவாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், எந்த சுவாரஸ்யமும் இல்லாத கதை, திரைக்கதையுடன் படமும் மெதுவாக நகருவதால் ஹாப் கேர்ள்பிரண்ட் - ரசிகர்களிடத்தில் பாதி கூட தேறுமா... என்பது சந்தேகம்.?!
ரேட்டிங் - 2/5















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!