விமர்சனம்
இந்த மூன்று விவகாரத்தில் இருந்தும் ஸ்ரீ மீண்டாரா? அதற்கு ஆரம்பத்தில் ஸ்ரீயை தவறாக கருதும் சந்திப் கிஷன் எவ்வாறு உதவுகிறார். சென்னைக்கு புதிதாக வரும் கார் டிரைவர் சார்லிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஆள் கடத்தலில் புதிதாக கால் வைத்த முனிஷ் காந்த் - ராமதாஸ் அடியாள் கும்பலிடம் சிக்கிக் கொண்டு படும் பாடென்ன.? சந்திப் - ரெஜினாவின் சந்தோஷமான க்ளைமாக்ஸை எட்டியதா..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு இரவு நேர சென்னை மாநகரின் எழில் ததும்ப, ததும்ப... விபரீதமான முடிவு ஏதும் நடந்தேறி விடுமோ.? எனும் பதைபதைப்பை சீனுக்கு சீன் ஏற்படுத்தி, வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது மாநகரம் படத்தின் மீதிக் கதை.
அடாவடித்தனமான அதேநேரம், யதார்த்தமான நாயகராக யாருடா மகேஷ் சந்திப்கிஷன், சென்னை வரும் அப்பாவி முகபாவ இளைஞர்களை அப்படியே தோலுரித்துக் காட்டும் லுக்கில் வழக்கு எண் நாயகர் ஸ்ரீ, இருவரும் போட்டி போடாமல் போட்டி போட்டு நடித்திருப்பது படத்திற்கு பெரும் பலம் கூட்டுகிறது.
நாயகி கேடி பில்லா கில்லாடி ரங்கா ரெஜினாவின் குடும்பபாங்குடன் கூடிய அழகிய முகமும், இயல்பான நடிப்பும், டீம் லீடராக அவரது பாத்திரமும் கச்சிதம்.
சார்லி, முனிஷ்காந்த் ராம்தாஸ், மதுசூதனன்... மூவரது பாத்திர படைப்புகளும் அவர்களது பங்களிப்பும் கூட செம சுவாரஸ்யம். அதிலும் புதிதாக பிள்ளை கடத்த களம் இறங்கும் முனிஷ் செம.
அன்பறிவ்வின் சண்டை பயற்சியும் அசத்தல்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.எஸ்.கே, படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் ஆகியோரின் பணியும், அவர் அவரது பணியில் அவர்களது புதிய பாணியும் கிளாஸ்.
இரவு வேட்டையாடுதே..., ஏண்டி உன்ன பிடிக்குது.... உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் மாயா பட இசையாளர் ஜாவிட்ரியாஸ் இசையில் மாஸ்.
மாயா பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் எழுத்து, இயக்கத்தில் எல்லோரும் இந்த ஊரை திட்டு வாங்க... ஆனா இந்த ஊரை விட்டு போக மாட்டாங்க..., நாம கேட்டா தான் நமக்கு நடக்கும் போது நாலு பேர் கேட்பாங்க... என்பது உள்ளிட்ட பவர்புல் டயலாக்குகள், அழகிய காதல், அசத்தல் சென்டிமென்ட், அதிரடி ஆக்ஷன், செம த்ரில் என எல்லா விதத்திலும் ஜனரஞ்சகமாக படம் பிடிக்கப்பட்டு, சென்னை மாநகரை முற்றிலும் புதிய நான்கைந்து கோணங்களில், அசத்தலாக காட்டியிருப்பதோடு, நான்கைந்து வெவ்வேறு வாழ்க்கையை கொண்ட மனிதர்கள், அவர்கள் ஒரே நாளில் சந்திக்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை கடைசியில் ஒரே புள்ளியில் இனைத்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக அசத்தலாக ஜெயித்திருக்கிறது மாநகரம்.
ஆகவே, ரசிகனுக்கு மாநகரம் - மகா சொர்க்கம்!






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!