Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு »

சிங் இஸ் பிலிங்(ஹிந்தி)

சிங் இஸ் பிலிங்(ஹிந்தி),Sing is bling
பிரபுதேவா இயக்கியிருக்கும் படம் இது.
03 அக், 2015 - 23:01 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சிங் இஸ் பிலிங்(ஹிந்தி)

தினமலர் விமர்சனம்


பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷ்ய்குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வௌியாகியிருக்கும் ஆக்ஷ்ன், ப்ளஸ் காமெடி நிறைந்த படம் தான் ''சிங் இஸ் பிலிங்''. இந்தப்படம் ரசிகர்களை கவர்ந்ததா...? என்று பார்ப்போம்...!


ரப்தார் சிங் எனும் அக்ஷ்ய் குமார் ஒரு வெகுளி, அதேசமயம் நல்ல உழைப்பாளி, ஆனால் அவரது அப்பாவின் கண்களுக்கு மட்டும் அவர் எதற்கு லாயக்கு அல்லாதவன் போல் தெரிகிறார். அப்பாவின் அறிவுரைப்படி கோவா செல்கிறார். ரோமானியாவிலிருந்து தனது அம்மாவை தேடி வந்துள்ள சாரா எனும் எமி ஜாக்சனுக்கு உதவ வருகிறார் ரப்தார். சாராவுக்கு இங்கிலீஷ் மட்டும் தான் பேச தெரியும், ஆனால் ரப்தாருக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதால் எமிலி எனும் லாரா தத்தாவை மொழிபெயர்ப்பாளராக வைத்து கொள்கின்றனர். ஒருக்கட்டத்தில் ரப்தாருக்கும், சாராவுக்கும் காதல் மலருகிறது. அதேசமயம் மார்க் எனும் கே கே மேனனும் சாராவை ஒருதலையாக காதலிக்கிறார். அதிலிருந்து துவங்குகிறது கதை. சாரா யாரை கரம்பிடிக்கிறார், தனது அம்மாவை தேடி கண்டுபிடித்தாரா.? உள்ளிட்ட கேள்விகளுக்கு காமெடியாகவும், அதிரடியாகவும் பதில் சொல்கிறது சிங் இஸ் பிலிங் படத்தின் மீதிக்கதை!


அக்ஷ்ய் குமார் வழக்கம் போலவே தனது அதிரடியாலும், வழக்கமான காமெடியாலும் ரசிகர்களை கவருகிறார்.


எமியின் நடிப்பு பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு லாரா தத்தா ரீ-என்ட்ரியாகியுள்ளார். அவரது நடிப்பு நன்றாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நிற்கும் அளவுக்கு இல்லை.


கே கே மேனன், ரதி அக்னிகோத்ரி, யோகராஜ் சிங் ஆகியோரது நடிப்பும் ஓகே.


ஆக்ஷ்ன் ஜாக்சன் தோல்வி படத்திற்கு பிறகு பிரபுதேவா சிங் இஸ் பிலிங் மூலம் ரசிகர்களை கவருவார் என்று பார்த்தால் வழக்கம் போல ஆக்ஷ்ன், ரொமான்ஸ் என்று ஏற்கனவே பார்த்து பழகிப்போன மசாலப்படத்தையே தந்திருக்கிறார்.


படத்தில் ஆக்ஷ்ன் காட்சிகள் மிரட்டுகிறது. இசை, வசனங்கள் எல்லாம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. படத்தின் முன்பாதியில் இருக்கு வேகம் பின்பாதியில் இல்லை. இருந்தாலும் படத்தை ஒருமுறை வேண்டுமானால் பார்க்கலாம்.


மொத்தத்தில், ''சிங் இஸ் பிலிங்'' - பிரகாசிக்கவில்லை!



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)
Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in