கடந்த 2007 ஆம் ஆண்டு டோலிவுட்டில் திரைக்கு வந்த மந்த்ரா திரைப்படம் அப்படத்தின் நாயகியான சார்மியின் திரை உலக வாழ்க்கையில் முக்கிய திரைப்படமாக அமைந்தது.தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகமாக மந்த்ரா 2 உருவாகி திரைக்கு வந்துள்ளது. இப்படத்திலும் நாயகியாக நடித்துள்ள சார்மி எந்த அளவிற்கு ரசிகர்களை பயமுறுத்தி இருக்கின்றார் என்று பார்ப்போம்.
மந்த்ரா 2 படத்தில் நாயகி சார்மிக்கு ஹைதராபாத்தில் வேலை கிடைக்கிறது. அங்கே ஒரு வயதான தம்பதியினருடன் பேயிங் கெஸ்டாக தங்குகிறார். வாழ்க்கை சுமுகமாக செல்கிறது. தீடீரென சிலரால் சார்மி மீது கொலை முயற்சி நடக்கிறது. இவள் தன் கல்லூரி தோழனும் போலீஸ் அதிகாரியுமான சீனுவிடம் உதவி கேட்கிறாள்.விசாரணை துவங்குகிறது, சார்மி வசிக்கும் இடம் செல்கிறார்கள். அங்கே அனைவருக்கும் பேர் அதிர்ச்சி கத்திருக்கிறது.
அதிர்ச்சிக்கு காரணம் என்ன? ஏன் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது? மந்த்ரா யார்? சார்மி இவ்வளவு சோதனைகளை சந்திக்க காரணம் என்ன? இவை அனைத்திற்கும் பதிலாக காட்சிகள் விரிகிறது.சந்தேகமே இல்லாமல் சார்மி அழகான ஆலவான பாவனைகளால் ரசிகர்களை கவர்ந்து. மொத்தப்படத்தையும் தாங்கி செல்கின்றார். அதுவும் படத்தின் இறுதி காட்சிகளில் நடிப்பு அருமை. பரணியும் தனது நடிப்பால் படத்தின் கதைக்கு அழகு சேர்த்திருக்கிறார்.
நாயகன் சீனு கம்பீரமான காவல் துறை அதிகாரியாக தோன்றி நடிப்பில் கவனம் ஈர்க்கின்றார். இன்னும் பல வெற்றி படங்களை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம். படத்தின் துவக்கத்தில் இடம் பெறும் பரபரப்பான காட்சிகளும், இறுதியில் இடம் பெறும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும். படத்திற்கு பெரும் பலம்..பலவீனம் என்று பார்த்தால் , படத்தின் திரைக்கதை தான்.. முதல் பத்து நிமிடத்திற்கு பிறகு இலக்கில்லாமல் செல்கிறது திரைக்கதை.பயமுறுத்த வேண்டிய இறப்புக்காட்சிகள் சலனமே இல்லாமல் கடக்கிறது.
சரியாக சொன்னால் படம் துவங்குவது என்னவோ இரண்டாம் பாதியில் தான். த்ரில்லர் படத்திற்கான எந்த சாயலும் படத்தில் இல்லை, நம்மால் அடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிவது பெரும் பலவீனம். படத்தில் சில லாஜிக் பிரச்சனை வேறு இருக்கிறது. முதல் பாதியில் கமர்ஸியல் விசயங்களை தவிர்த்திருக்கலாம். ஒளிப்பதிவாளர் அழகாக வீடுகளையும் இடங்களையும் காட்டி ஆறுதல் தருகின்றார் . த்ரில்லர் படத்திற்கு ஆன்மாவாக இருக்க வேண்டிய பின்னணி இசை உயிரற்று ஒலிக்கிறது. முக்கிய இடங்களில் கூட படத்தை தாங்கி பிடிக்கவில்லை.
அடுத்ததாக இயக்குநர் , திரைக்கதையில் பெரும் சொதப்பல் செய்துவிட்டார். அதை எடிட்டிங்கிலாவது சரி செய்திருக்கலாம் அதுவும் செய்யவில்லை. சார்மி படத்தில் இருக்கிறார். அதை தவிர வேறு ஏதும் முக்கியமாக இல்லை. மந்த்ரா அந்த பெயருக்குன்டான மதிப்பை இப்படம் குறைத்து விட்டது.பெரிய எதிர்பார்ப்பின்றி போனால் மந்த்ராவை ரசிக்கலாம்.
மந்த்ரா 2 - எதிர்பார்ப்பின்றி பார்க்கலாம்