Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »

சேர்ந்து போலாமா

சேர்ந்து போலாமா,Serndhu Polama
09 மார், 2015 - 18:29 IST

 கருத்தைப் பதிவு செய்ய

எழுத்தின் அளவு:
தினமலர் விமர்சனம் » சேர்ந்து போலாமா

தினமலர் விமர்சனம்


வினய் நடித்து வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டிருக்கும் வித்தியாசமான காதல்படம்! முதன்முதலாக மொத்த தமிழ்படமும், நியூசிலாந்து நாட்டிலேயே படமாக்கப்பட்டிருப்பது "சேர்ந்து போலாமா" படத்தின் சிறப்புகளில் ஒன்று!.


கதைப்படி, வினய், மதுரிமா இருவரும் சின்ன வயது முதலே நியூசிலாந்து வீதிகளில் ஒன்றாக நண்பர்களுடன் சுற்றி்த்திரிந்து படித்து வளர்ந்து ஆளானவர்கள்!. இந்நிலையில், ஒருநாள் தன் தம்பி சாவுக்கு வினய் தான் காரணம் என தவறாக கருதும் மதுரிமா., வினய்யை தீர்த்து கட்ட திட்டம் வகுக்கிறார். ஆனால், பிரபல புகைப்பட கலைஞரான வினய்., தன்னிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள வரும் மாடல் அழகி பிரீத்தி கிறிஸ்டினா பவுல் மீது காதல் பி்த்துபிடித்து அலைகிறார். முதலில், வினய்யுடன் காதலுடன் வாழும் பிரீத்தி கிறிஸ்டினா., வசதியானவருடன் வாழ விரும்பி, வேறு ஒருத்தருக்கு கழுத்து நீட்ட சம்மதிக்கிறார். இதுதெரியாமல், பிரீத்தியை தேடி அலைகிறார் வினய். இதுதெரிந்து அவருக்கு பிரீத்தியை சேர்த்துவைக்க உதவுவதுபோல கூட வரும் மதுரிமா., சரியான சந்தர்ப்பத்தில் வினய்யை தீர்த்துக்கட்ட காத்திருக்கிறார்!. ஒருபக்கம் பிரீத்தியின் கணவர் சைடு ஆட்கள் வேறு வினய்யை சுத்துபோட்டு கூறு போட துடிக்கின்றனர். இந்நிலையில், தன் தம்பி சாவுக்கு வினய் காரணமில்லை..என்பது மதுரிமாவுக்கு தெரியவருகிறது. கூடவே, வினய் மீது காதலும் வருகிறது!. வினய், விரோதிகளிடமிருந்து தப்பித்தாரா?.. மதுரிமா மீது காதல் கொண்டாரா.? என்பது கிளைமாக்ஸ்.


வினய், மதுரிமா, பிரீத்தி கிறிஸ்டினா பவுல், தம்பி ராமைய்யா, அருண்சாய், தலைவாசல் விஜய், நந்து என ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதிலும், வினய் வெளிநாட்டு வாழ் தமிழராக, மாடலிங் புகைப்படக்கலைஞராக வித்தியாசமான பாத்திரத்தில் ஜொலித்திருக்கிறார்.


கள்ளக்காதலிகளை தேடி, ஓடி அடிபட்டு திரும்பும் தம்பி ராமைய்யாவின் காமெடி எபிசோட் சூப்பர்!


ரவிமேத்யூவின் எழுத்து, விஷ்ணு மோகன் சைத்ராவின் இசை, சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிளஸ் பாயிண்டுகளும், அழகிய நியூசிலாந்து லொகேஷன்களும், அனில்குமாரின் இயக்கத்தில் சேர்ந்துபோலாமாவை சோர்ந்துபோக விடவில்லை!.


மொத்தத்தில் அயல்நாட்டு அழகழகிய லொகேசன்களுக்காகவே சேர்ந்துபோலாமா படத்திற்கு ரசிகர்கள் ஒருமுறை போலாம்!.



வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g  to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in