விமர்சனம்
--------------------------------------------------------------
குமுதம் சினி விமர்சனம்
த்ரில்லிங், சஸ்பென்ஸ் படவரிசையில் சலீம் கொஞ்சம் வித்தியாசமானது.
காந்தி போல் நேர்மையாக வாழும் டாக்டர் சலீம். அந்த நேர்மையைக் காரணம்காட்டி, அவரை மணக்க மறுக்கிறார் நிச்சயமான பெண். அவர் வேலை செய்யும் மருத்துவமனை நிர்வாகமும் அவரை டிஸ்மிஸ் செய்கிறது. அதனால் ஒரே ஒரு நாள் மட்டும் அநீதியான பாதைக்கு சலீம் மாறுவதுதான் அந்த வித்தியாசம்.
சலீமாக வரும் விஜய் ஆண்டனி அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. தன்னை வெறுக்கும் வருங்கால மனைவியிடம் அவர் காட்டும் அப்பாவித்தனமும், எதிரிகள் முன் அவர் எடுக்கும் விஸ்வரூபமும் அதிரடி. இளம் பெண்ணைக் கடத்தி, கற்பழித்து கொலை செய்யும் பெரிய இடத்துப் பையன்களுக்கு சலீம் தரும் தண்டனை வித்தியாசமானது.
நாயகி அக்ஷா பர்தாசனி சிடுசிடு கடுகடு முகத்திற்கு ஏற்ற தேர்வு தமிழ் சினிமா மரபுப்படி பாடல்காட்சிகளில் தாராளம்.
போலீஸ் அதிகாரியாக வரும் சந்திரமௌலி, பார்வையால் கோபத்தைக் கக்கும் மனோகர் கச்சிதம்.
விஜய் ஆண்டனி - இசையில் மஸ்காரா..., உன்னை கண்ட நாள் முதல்... பாடல்கள் பேசப்படும்.
நீ அல்கொய்தாவா லக்ஷ்கர் இ தொய்பாவா? என் பேரை வெச்சு இப்படி முடிவெடுக்காதீங்க ஸார். வேணுமுன்னா விஜய்ன்னோ ஆண்டனின்னோ வெச்சுக்கங்க போன்ற நறுக் வசனம் படத்திற்கு பலம்.
இயக்கம் நிர்மல் குமார். முன் பாதையில் மெதுவாக நகரும் திரைக்கதை, பல லாஜிக் மீறங்கள் என்று குறைகள் இருந்தாலும் பிற்பாதியில் ஜெட் வேகத்தில் திரைக்கதையைக் கொண்டு செல்வதால் குறைகள் விடு ஜுட்.
சலீம்: சல்யூட்.
குமுதம் ரேட்டிங் - ஓகே






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!