திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு | இளம் வயது தோற்றத்தில் கிஷோர் | சினிமாவில் 20 ஆண்டுகள்: பயணம் முடியவில்லை என்கிறார் ரெஜினா | அடுத்த பட அறிவிப்பில் தாமதிக்கும் அஜித், விக்ரம், சிவகார்த்திகேயன் | இரண்டு மாத 'வசூல் வறட்சி'யை சமாளித்த 'பைசன், டியூட்' | இசையமைப்பாளர் சபேஷ் காலமானார் | மனோரமாவின் மகன் பூபதி காலமானார் | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 மொழிகளில் ஹீரோயினாக நடித்த வைஜயந்திமாலா | பிளாஷ்பேக்: அருணாச்சலம் முன்னோடி 'பணம் படுத்தும் பாடு' | என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ? |
பாலிவுட்டின் முன்னணி நடன இயக்குனர் பரா கான். ஷாருக்கான் நடித்த ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அரசு அறிவுறுத்தலின்படி கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பரா கான் போட்டுக் கொண்டுள்ளார். அப்படி இருந்தும் தற்போது இவருக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பரா கான், “இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளேன். மேலும் அதுபோன்று இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் தான் பணியாற்றவும் செய்தேன். அப்படி இருந்தும் இப்போது கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அதனால் சமீபகலாமாக என்னுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.