சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
இந்த கொரோனா தாக்கத்தாலும் ஊரடங்காலும் கடந்த ஒரு வருட காலாத்திற்கும் மேலாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து, பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாகவே மாறிவிட்ட சோனு சூட், சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, 18வயதான தனது மூத்த மகன் இஷானுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது.
ஒருபக்கம் மக்களின் உதவிகளுக்காக பணம் செலவிடும் சோனு சூட், இந்த சமயத்தில் இப்படி ஆடம்பரமாக செலவிடுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவிலும் இது எதிரொலித்தது. சோனு சூட்டின் கவனத்துக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சோனு சூட், “அந்த விலை உயர்ந்த காரை நான் என் மகனுக்காக வாங்கவில்லை. சொல்லப்போனால் அந்த கார், சும்மா ட்ரையல் பாருங்களேன் என கூறி என் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அவ்வளவுதான்.” என கூறி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், “தந்தையர் தினத்திற்கு நான் ஏன், என் மகனுக்கு பரிசு கொடுக்கவேண்டும்.? அவன் அல்லவா எனக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்” என .நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்..