இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் வெளிநாட்டு கார் ஒன்றை 55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த வகையில் வரிஏய்ப்பு செய்ததாக அவர் மீது சுங்க இலாகா துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சுஷ்மிதா தான் பழைய கார் என்று நினைத்தே அதை வாங்கியதாகவும் அதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார். காருக்கு வரியாக 20 லட்சம் ரூபாயும் கட்டினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்தார். தான் வரி கட்டிவிட்டதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறும் சுஷ்மிதா சென் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை ஏற்று நீதிமன்றம் பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம். எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.