தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது |

ஹாலிவுட் நடிகர் சல்மான் கான் தற்போது 'பேட்டில் ஆப் கல்வான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். அபூர்வ லக்கியா என்பவர் இயக்கி வருகின்ற இந்த படத்தின் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக இரட்டை இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து இவர்களுக்கிடையே கடந்த மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக இவர்கள் சொன்ன கதை சல்மான் கானுக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அதாவது சினிமாவில் சூப்பர் ஹீரோவாக இருக்கும் ஒருவர் அது போரடித்து போய் அதை விட்டு ஒதுங்கி ஓய்வு பெற நினைக்கிறார். ஆனால் காலம் அவரை மீண்டும் அதே கதாபாத்திரங்களை செய்யும்படி இழுத்து வருகிறதாம். காமெடி மற்றும் ஆக்சன் கலந்து இந்த கதையை உருவாக்கி இருக்கிறார்களாம். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




