வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சல்மான்கான் நடிப்பில் அடுத்ததாக ராணுவ பின்னணியில் 'பேட்டில் ஆப் கல்வான்' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல நடிகர் சஞ்சய் தத் தற்போது தென்னிந்திய மொழிகளில் குணசித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். கடந்த மாதம் கூட தெலுங்கில் அவர் நடித்திருந்த 'தி ராஜா சாப்' திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உருவாகியுள்ள '7 டாக்ஸ்' (7 Dogs) என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஹீரோவாக எகிப்து நடிகர் கரீம் அப்துல் ஆசிஸ் என்பவர் நடித்திருக்கிறார். 'பேட் பாய்ஸ் பார் லைப்' மற்றும் 'பேட் பாய்ஸ் ரைட் ஆர் டை' ஆகிய வெற்றி படங்களை இயக்கிய அதில் எல் அர்பி மற்றும் பிலால் பல்லா என்கிற இரட்டை இயக்குனர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரில் சல்மான்கான் மற்றும் சஞ்சய் தத் இருவரின் கதாபாத்திரங்களும் ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன.




