‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

ஹிந்தியில் கடந்த 2021ல் சைப் அலிகான், அர்ஜுன் கபூர், யாமி கவுதம் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'பூத் போலீஸ்'. ஹாரர் காமெடி படமாக வெளியான இந்த படத்தை இயக்குனர் பவன் கிருபாலனி இயக்கியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஐந்து வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் 'பூத் போலீஸ் 2' என்கிற பெயரில் உருவாக இருக்கிறது. ஆனால் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.
முதல் பாகத்தில் நடித்த சைப் அலிகான் மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக புது காம்பினேஷன் ஆக பிரபலமான ஒரு சீனியர் மற்றும் ஜூனியர் நடிகரை இணைந்து நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். இதில் ஆச்சரியமாக நடிகர் சைப் அலிகான் தற்போது பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹைவான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த பூத் போலீஸ் 2 படத்தை இயக்குவதற்காக இயக்குனர் பிரியதர்ஷனுக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




