Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

50 கிமீ நடந்தே படப்பிடிப்புக்கு வந்த தர்மேந்திரா ; ஷோலே இயக்குனர் புதிய தகவல்

28 ஜன, 2026 - 01:30 IST
எழுத்தின் அளவு:
Dharmendra-walked-50-km-to-shoot-Sholay-director-reveals-new-information
Advertisement


இந்திய சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் இன்றளவும் ஆராதிக்கப்பட்டு வரும் படம் 'ஷோலே'. கடந்த 1975ல் வெளியான இந்த படம் 50 வருடங்கள் கடந்தும் தற்போதும் பேசப்படும் படமாக இருக்கிறது. இதில் அமிதாபச்சன், தர்மேந்திரா, சஞ்சீவ் குமார், அம்ஜத் கான், ஹேமமாலினி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் ரமேஷ் சிப்பி இயக்கியிருந்தார்.

கடந்து சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் ஹீரோக்களில் ஒருவருவான தர்மேந்திரா காலமானார். இந்த நிலையில் சமீபத்திய சிறப்பு நிகழ்வு ஒன்று ஷோலே இயக்குனர் ரமேஷ் சிப்பியும், தர்மேந்திராவின் மனைவியும் ஷோலே கதாநாயகியுமான ஹேமமாலினியும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய ரமேஷ் சிப்பி, தர்மேந்திரா குறித்து ஒரு ஆச்சரியமான தகவலை கூறினார்.

“ஒரு முறை ஷோலே படப்பிடிப்பின் போது தாங்கள் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து நடந்தே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முடிவு செய்தார் தர்மேந்திரா. படப்பிடிப்பு நடக்கும் இடம் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரம் இருக்கும். ஆனாலும் இரவு இரண்டு மணிக்கு மேல் எழுந்து நடக்க தொடங்கினார் தர்மேந்திரா. கிளம்புவதற்கு முன் ஒரு இளநீரில் ஓட்காவை சேர்த்து குடித்துவிட்டு நடக்க ஆரம்பித்தார் தர்மேந்திரா. இப்படி மிக்சிங் செய்து குடிப்பது ரொம்பவே எனர்ஜியை தரும் என்பது அவரது எண்ணம், நம்ப மாட்டீர்கள்..

கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்து காலை 7 மணி அளவில் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து விட்டார் தர்மேந்திரா. வந்த பிறகு ஒரு மணி நேரம் மட்டும் ஓய்வு எடுத்தவர், அதன் பிறகு நான் ரெடி என்று படப்பிடிப்பிற்கு தயாராக வந்து நின்றார். ஒரு பக்கம் தர்மேந்திரா ரொம்பவே ஜாலியானவர் என்றாலும் இது போன்ற சில விஷயங்களை அவர் விடாப்பிடியாக நின்று சாதிப்பார்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ரமேஷ் சிப்பி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் இடம் பெறாதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்பார்டர் 2 வில் அக்ஷய் கன்னா காட்சிகள் ... வருண் தவானுக்கு மும்பை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை வருண் தவானுக்கு மும்பை மெட்ரோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap