துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

'ராஞ்சனா, அத்ராங்கி ரே' படங்களுக்குப் பிறகு ஆனந்த் எல் ராய், தனுஷ் கூட்டணியில் உருவான 'தேரே இஷ்க் மெய்ன்' ஹிந்திப் படம் இன்று வெளியானது. இப்படத்தைத் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இருப்பதாகவே கூறியுள்ளனர்.
தனுஷ் நடித்து ஹிந்தியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களில், ஆனந்த் எல் ராய் உடன் அவர் முதன் முதலில் இணைந்த, ஹிந்தியில் அறிமுகமான 'ராஞ்சனா' மட்டுமே 100 கோடியைக் கடந்தது. அதன் பின் வெளியான 'ஷமிதாப்' படம் தோல்வியடைந்தது. அதற்கடுத்து வந்த 'அத்ராங்கி ரே' படம் ஓடிடியில் நேரடியாக வெளியானது.
பாலிவுட் வட்டாரங்களில் 'தேரே இஷ்க் மெய்ன்' படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று நம்புகிறார்கள். தமிழ், தெலுங்கில் இப்படத்திற்காக எந்தவிதமான புரமோஷனும் செய்யவில்லை. இரண்டு மொழிகளிலும் தனுஷுக்கு நல்ல மார்க்கெட் இருந்தும் அதை செய்யத் தவறிவிட்டார்கள்.