பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி அவரது கணவர் ஆகியோர் 2015 முதல் 2023 வரை தன்னை வியாபார ரீதியாக ஏமாற்றியதாக தீபக் கோத்தாரி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை பொருளாதார குற்றப் பிரிவினர் விசாரித்து வருகிறார்கள். ஷில்பா மற்றும் அவரது கணவருக்கு எதிராக ஏற்கெனவே 'லுக் அவுட் நோட்டீஸ்' உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டியிடம் சில தினங்களுக்கு முன்பு நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் வந்த வழக்கு விசாரணையின் போது ஷில்பா தம்பதியினர் 60 கோடி ரூபாயை செலுத்திய பிறகுதான் வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த தீபக், ஷில்பா தம்பதியிடம் வியாபார அபிவிருத்திக்காகக் கொடுத்த பணத்தை அவர்கள் தங்களது சொந்த செலவுக்காகப் பயன்படுத்தினார் என்று புகார் அளித்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த பொருளாதார குற்றப் பிரிவினர் அதை விசாரணையில் உறுதிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, வெளிநாடுகளுக்கு செல்ல முடியாதபடி 'லுக் அவுட் நோட்டீஸ்' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.