துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'வாகா' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் இவர் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் இப்படி நகைகளை கடத்துவதற்கு கர்நாடக போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் மீது ஏற்கனவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை வழக்கு தொடர்ந்து உள்ளன. அதே சமயம் இவர் பலமுறை தனது ஜாமினுக்காக விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டன இந்த நிலையில் தற்போது மோசடி பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி காபிபோசா சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் ஒரு வருடத்திற்கு அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் அதுவரை அவர் சிறையில் தான் இருந்தாக வேண்டும் என்றும் தெரியவந்துள்ளது.