பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவராக வலம் வருகிறார். பாலிவுட்டில் பெரிய படங்கள் வெளியானாலும் தென்னிந்திய மொழியில் உருவாகி பாலிவுட்டில் ரிலீசாகும் படங்களானாலும் அதை அங்கு வெளியிடுபவராகவோ அல்லது அதை புரமோட் செய்யும் நபராகவோ கரண் ஜோஹர் முன்னிலை வகிப்பார். தற்போது 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' என்கிற படத்தை இயக்கி வருகிறார் கரண் ஜோஹர்.
இந்த நிலையில் கரண் ஜோஹர் திரையுலகில் நுழைந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. இதற்காக பிரிட்டிஷ் பார்லிமென்ட் அவரை லண்டனுக்கு நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி அவரை கவுரவித்துள்ளது. இந்த சந்தோஷத்துடன் இவர் தற்போது இயக்கி வரும் 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் டீசரை நடிகர் ஷாருக்கான் வெளியிட இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் கரண் ஜோஹர்.