மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ரேவதி தற்போது பாலிவுட்டில் கஜோலை வைத்து சலாம் வெங்கி என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் ஹிந்தியில் ரேவதி கதையின் நாயகியாக நடித்துள்ள 'ஆயே ஜிந்தகி' என்கிற படம் தற்போது வெளியாகியுள்ளது. உறுப்புகள் தானம் செய்வதை வலியுறுத்தும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தில், மருத்துவமனையில் எதிர்பாராமல் இறப்பவர்களின் உறுப்புகளை தானம் செய்ய வைப்பதற்காக அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அந்த குடும்பத்தாரிடம் பேசி சம்மதிக்க வைக்கும் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார்.
இந்த படத்தை அணிர்பன் போஸ் என்பவர் இயக்கி உள்ளார். இந்தப்படம் சமூக நோக்கத்துடன் உருவாகியுள்ளதாக கூறி இந்தப்படத்திற்கு தற்போது ராஜஸ்தான் அரசு முழு வரிவிலக்கு அளித்துள்ளது. இது படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் சிலாதித்யா போரா கூறும்போது, “ராஜஸ்தான் அரசுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளதன் மூலம் இந்த படம் இன்னும் நிறைய மக்களால் பார்க்கப்படும். அதன்மூலம் உறுப்புகள் தானம் பற்றிய விழிப்புணர்வும் ஆர்வமும் இன்னும் அதிக மக்களிடம் ஏற்பட ஒரு வாய்ப்பை ராஜஸ்தான் அரசு உருவாக்கி கொடுத்துள்ளது. இதனால் உரிய நேரத்தில் உறுப்புகள் தானம் கிடைக்காத நிலையில் மடியும் உயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.