பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
சூர்யா நடிப்பில் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'சூரரைப்போற்று' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது . டெக்கான் ஏர்வேஸ் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியாகிய இப்படம் ஹிந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது.
தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே ஹிந்தியிலும் இயக்குக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும், அபண்டன்ஷியா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. சூர்யா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். ராதிகா மதன் என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.
படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நடிகர் சூர்யா இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒரு நாள் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்.