அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

மும்பை : நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த சிறுமிக்கு 'பாலிவுட்' நடிகர் சோனு சூட் உதவியுடன் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து சிறுமி நலமுடன் உள்ளார்.
பீஹாரை சேர்ந்த சிறுமி சவுமுகி குமாரி, பிறக்கும்போதே நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்தார். இதனால், பல்வேறு உடல் உபாதைகளுடன் அவர் சிரமப்பட்டு வந்தார். ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட் இந்த சிறுமி பற்றி கேள்விப்பட்டு அவரை நேரில் சந்தித்தார்.
அவரது மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்தார். குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கிரண் மருத்துவமனையில் சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கூடுதலான இரண்டு கைகளும், கால்களும் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி நலமுடன் இருக்கும் புகைப்படங்களை, சோனு சூட் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.