ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

நடிக்க திறமை இருந்தால் போதும் நிறம் முக்கியமில்லை என்பதை நிருபித்து காட்டி தமிழ் திரையுலகில் வளர்ந்து வருபவர் நடிகை இஸ்மத்பானு. இவர் நம்முடன் பகிர்ந்தது...
பிறந்தது புதுச்சேரியில் உள்ள சித்தாமூர் கிராமம். வளர்ந்தது, பள்ளி, கல்லுாரி படிப்பு எல்லாமே சென்னை. பி.ஏ., இதழியல் பயின்றேன். அப்போதே தனியார் தொலைக்காட்சியில் மண்பேசும் சரித்திரம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அங்கு நிருபராக பணியாற்றினேன்.
நல்ல வசதியாக வாழ்ந்து ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் இழந்தது எங்கள் குடும்பம். மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து துவக்க வேண்டிய நிலை எங்களுக்கு. இதனால் வீட்டை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு ஏற்பட்டதால் வருமானத்தை பெருக்க ஏதாவது ஒன்று செய்ய வேண்டிய நிலை உண்டானது.
அந்த நேரத்தில் சினிமா ஷூட்டிங் பணிக்கு சென்றால் தினமும் வருமானம் கிடைக்கும் என தெரிந்த நண்பர் சொன்னார். சினிமாவில் சிறிய வாய்ப்பு கிடைத்தது. நாட்கள் செல்ல செல்ல சினிமாவின் மீது காதல் ஏற்பட்டது. ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் என்னை நானே திரையில் பார்த்ததால் ஆர்வம் அதிகரித்தது.
ஆரம்பத்தில் நடிக்கும் போது, கேமரா எப்போதும் நம்மை கவனிக்காது. இந்த கேமரா எப்போதாவது நம்மை திரும்பி பார்க்காதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. இப்படி வாய்ப்புக்காக ஏறி இறங்கிய நிறுவனங்களே 500க்கும் மேல் இருக்கும். இடையிடையே கொஞ்சம் எழுதவும் செய்தேன்.
மகாமுனி, சிவப்பு மஞ்சள் பச்சை, ஏ-ஒன் ஆகிய படங்களில் சிறு கதாபத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு நாள் திடீரென இயக்குனர் வெற்றிமாறன் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக அலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். அதை நம்ப முடியாமல் யாரோ அலைபேசியில் விளையாடுகின்றனர் என நினைத்தேன்.
அப்படி கிடைத்தது தான் அசுரன் திரைப்படம். இந்த ஒரு படம் என் வாழ்க்கையை திருப்பி போட்டது. இதற்கு பின் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக முடக்கம் ஏற்பட்டதால் வாய்ப்புகள் குறைந்து மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டிய நிலை உண்டானது.
ஆனால் நம்பிக்கையை விடாமல் மனதை தயார்படுத்தி கொண்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் பணம் மீதான நாட்டம் குறைந்து நல்ல கதாபாத்திரம் மீதான நாட்டம் அதிகரித்தது. இந்த ஆசையால் மட்டுமே தற்போது தொடர்ந்து வளர்ந்து வருகிறேன்.
வாழ்க்கையில் எனக்கு மிகவும் பாதுகாப்பான வேலையாக இருக்கிறது சினிமா. அதிகாலை 2:00 மணிக்கு படப்பிடிப்பு நடந்தாலும் அச்ச உணர்வு ஏற்படுவதில்லை.
கடந்தாண்டு டிசம்பரில் லேபிள் என்ற வெப்சீரிஸ், ரகுதாத்தா, வெப்பம் குளிர் மழை ஆகிய படங்கள் வெளியானது. மதுரையில் ஷூட்டிங் நடக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
நிருபராக இருந்த போது எல்லா கஷ்டமான சூழ்நிலையிலும் பணியாற்றிய அனுபவம், கேமரா முன் நிற்கும் போது ஏற்படும் பதற்றம், வசனங்கள் உச்சரிப்பு குறை, குரல் தயக்கம் ஆகியவற்றை தெளிவாக எதிர்கொண்டு சாதிக்க உதவியது.
ஒரு கதாபாத்திரத்தில் மனம் ஒத்து நடிக்க முடிந்தால் போதும் அதில் நடிக்கும் அனைவருமே கதாநாயகன், கதாநாயகியாக ஆகிவிடுவர்.
சினிமாவில் முன்பு சிவப்பு நிற கதாநாயகிகள் வேண்டும் என பலரும் விருப்பப்பட்டது உண்டு. ஆனால் தற்போது இயக்குனர்கள் மத்தியில் இந்த மனநிலை இல்லை. இதற்கு முக்கிய காரணம் படத்தில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக இருக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பம். யதார்த்தமான படங்களின் வருகையால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. இதனால் கறுப்பாக இருப்பவர்களை விரும்பி நடிக்க அழைக்கின்றனர்.
25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். தோல்விகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நினைத்தது அனைத்தும் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. அதனால் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற தொடர்ந்து போராடி வருகிறேன்.
ஒரு கதாபாத்திரத்தில் மனம் ஒத்து நடிக்க முடிந்தால் போதும் அதில் நடிக்கும் அனைவருமே கதாநாயகன், கதாநாயகியாக ஆகிவிடுவர்.