காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

கண்முன் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை சரியான 'ரூட்'டில் சென்று உடனே அள்ளிக்கொள்வதில் தான் நம்ம திறமையே இருக்கு. குறிப்பாக பெண்கள் எந்த சூழலிலும் சோர்ந்து விடாமல் சுறுசுறுப்புக்கு சொந்தக்காரியாக இருக்க வேண்டும் என்கிறார் நடிப்பு பியூட்டிஷியன், ரீல்ஸ் மேக்கர் என பிஸியாக வலம் வரும் சிந்துஜா.
இவர் சண்டே ஸ்பெஷலுக்காக நம்மிடம்...
படித்தது பி.எஸ்சி.,. சிறுவயதில் இருந்து நடிப்பு மீது இனம் புரியாத காதல் ஏற்பட்டது. அதற்கேற்ப கல்லுாரி முடித்த பின் 'மாடலிங்', விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. 'தேவதை', 'கல்யாண பரிசு' உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட 'டிவி' சீரியல்களில் நடித்ததால் கொஞ்சம் 'ரீச்' கிடைத்தது. அதையடுத்து நகுல் நடித்த 'செய்' உள்ளிட்ட சினிமாக்களிலும் கேரக்டர் ரோலில் நடித்தேன். 'நாளைய தீர்ப்பு' உள்ளிட்ட சில ஆவணப்படங்கள், விளம்பரம், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன்.
கல்யாணத்திற்கு பின் குடும்பச் சூழல் காரணமாக சினிமா வாய்ப்பு குறைந்த நேரத்தில் சோர்ந்து போய் விடாமல் நாமக்கல்லில் பியூட்டி பார்லர் துவக்கினேன்.
ஆனாலும் என் நடிப்பு தாகம் அடங்கவில்லை. அப்போது தான் எனக்கு 'இன்ஸ்டா' கை கொடுத்தது. பியூட்டி பார்லர், வீட்டு வேலை முடித்த பின் தினமும் ஒரு 'ரீல்ஸ்' என்ற ரீதியில் பதிவேற்றம் செய்து வருகிறேன்.
குறிப்பாக 80களில் மனதை கொள்ளை கொண்ட இளையராஜா பாடல்களின் 'ரீல்ஸ்'க்கு அதிக லைக்ஸ், கமெண்ட்ஸ் கிடைக்கின்றன. இதுதவிர பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பொருளாதாரத்தில் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும் போன்ற 'சப்ஜெக்ட்' கொண்ட ரீல்ஸூக்கும் வரவேற்பு இருக்கு.
எனக்கு வரும் 'கமெண்ட்ஸ்'ல் 10 சதவீதம் முகம் சுளிப்பதாக இருக்கும். ஆனால் அதைப்பற்றி கண்டுகொள்ளாமல் 'டெலீட்' செய்து விட்டு அடுத்த 'ரீல்ஸ்'க்கு ரெடியாகிவிடுவேன். என்னுடைய 'ரீல்ஸில்' கவர்ச்சி இருப்பதாக பலர் 'கமெண்ட்' பண்றாங்க. சினிமாவில் நடிப்பதற்கு அதுவும் கொஞ்சம் தேவை தான். என் ரீல்ஸ்க்கு முதல் 'லைக்' போடுவதே என் கணவர் தான். அவர் ராணுவத்தில் பணியாற்றுகிறார். வீடியோ பதிவின்போது 'டிரெஸில்' மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவேன், அவ்வளவு தான்.
பெண்கள் வீடுகளில் முடங்கி கிடக்காமல் தங்களுக்குள் என்ன திறமை உள்ளதோ அதன் மூலம் சாதிக்க வெளி உலகத்திற்கு தைரியமாக வரவேண்டும். நடிப்பில் சாதிக்க வேண்டும் என்பது என் கனவு என்கிறார் இந்த சிந்துஜா.