Advertisement

சிறப்புச்செய்திகள்

Tamil Cinema 2021 Rewind
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

2021 - தமிழ் சினிமா ரீவைன்ட்…

31 டிச, 2021 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-2021-Rewind

கடந்தாண்டு ஒப்பிடும்போது தமிழ் திரைத்துறைக்கு மட்டுமின்றி இந்திய திரைத்துறையே மீண்டு வந்த ஆண்டாக 2021 அமைந்திருந்தது. இருப்பினும் நிறைய இழப்புகள், சில வெற்றிகள், அதிர்ச்சி அளித்த மரணங்கள்.... என பல நிகழ்வுகள் நடந்தன. தமிழ் சினிமா 2021 எப்படி இருந்தது என்பதை சற்றே திரும்பி பார்ப்போம்....

* 2021ம் ஆண்டின் முதல் நாளிலேயே இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன

* புத்தாண்டின் ஆரம்பமும் தியேட்டர்களைப் பொறுத்தவரையில் 50 சதவீத இருக்கைகளில் தான் தொடர்ந்தது.

* பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'மாஸ்டர்' திரைப்படம் 50 சதவீத இருக்கைகளுடன் ஜனவரி 13ம் தேதி வெளியானது.

* 'மாஸ்டர்' படத்தில் முதல் முறையாக நேரடி வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி.


* சிலம்பரசன் நடித்த 'ஈஸ்வரன்' படமும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி வெளியானது.

* ஜனவரி மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியான மாதவன் நடித்த 'மாறா', ஜெயம் ரவி நடித்த 'பூமி' ஆகிய படங்கள் கடும் விமர்சனத்துக்கு ஆளாகின.

* கொரோனா முதல் அலை தாக்கத்திற்குப் பிறகு தியேட்டர்கள் 100 சதவீத அனுமதியுடன் பிப்ரவரி 1ம் தேதி முதல் செயல்பட ஆரம்பித்தன.

* விஜய் சேதுபதி, கவுதம் மேனன், அமலா பால் மற்றும் பலர் நடிக்க கவுதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி இயக்கிய ஆந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' படம் பிப்ரவரி 12 தியேட்டர்களில் வெளியானது.

* சந்தானம் நாயகனாக நடித்த 'பாரிஸ் ஜெயராஜ்' பிப்ரவரி 12ல் வெளியானது. படம் நகைச்சுவையாக இருந்தும் ரசிகர்களிடம் சென்று சேரவில்லை.

* விஷால் நாயகனாக நடித்த 'சக்ரா' படம் பிப்ரவரி 19ம் தேதி வெளியாகி, தோல்விப் படமாக அமைந்தது.

* ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்த 'ஏலே' படம் நேரடியாக டிவியில் பிப்ரவரி 28ம் தேதி ஒளிபரப்பானது.

* செல்வராகவன் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா நாயகனாக நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் சில வருட தாமதத்திற்குப் பின் மார்ச் 5ம் தேதி தியேட்டர்களில் வெளியானது.


* மார்ச் 12ம் தேதி ஆர்யா நடித்த 'டெடி' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

* பிரபு சாலமன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த 'காடன்' படம் மார்ச் 26ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி ஏமாற்றத்தைத் தந்தது.

* ஏப்ரல் 2ம் தேதி தியேட்டர்களில் வெளியான கார்த்தி நடித்த 'சுல்தான்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.

* யோகிபாபு கதாநாயகனாக நடித்த 'மண்டேலா' படம் பிப்ரவரி 4ம் தேதி, நேரடியாக டிவியிலும் பின்பு அன்று இரவே ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

* ஏப்ரல் 9ம் தேதி தனுஷ் நடித்து தியேட்டர்களில் வெளியான 'கர்ணன்' படத்தில் வருடம் பற்றிய தகவல் ஒன்றை தவறாகச் சொன்னதால் சர்ச்சை எழுந்து, பின்னர் அது மாற்றப்பட்டது.

* கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தியேட்டர்களில் இருக்கைகளுக்கான அனுமதி ஏப்ரல் 10ம் தேதி முதல் 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

* த்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'பரமபத விளையாட்டு' படம் ஏப்ரல் 14ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.


* ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் நாயகனாக நடித்த 'வணக்கம்டா மாப்ளே' படம் ஏப்ரல் 16ம் தேதி நேரடியாக டிவியில் வெளியிடப்பட்டது.

* கொரோனா இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதன் காரணமாக ஏப்ரல் 26ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன.

* 2021ம் ஆண்டின் ஆரம்பம் 50 சதவீத இருக்கையுடன் ஆரம்பித்து, பிப்ரவரி 1ல் 100 சதவீத இருக்கை அனுமதியாக மாறி, பின் ஏப்ரல் 26ம் தேதி முழுவதுமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.

* தியேட்டர்கள் முழுவதுமாக மூடப்பட்டதால், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படம் எதிர்பாராத விதத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. படம் மிகவும் மோசமான வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.

* ஜுலை மாதம் 22ம் தேதி பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த 'சார்பட்டா பரம்பரை' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அதிகமான மீம்ஸ்கள் வரும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

* மணிரத்னம் தயாரிப்பில், 9 இயக்குனர்கள் இயக்கத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்த 'நவரசா' படம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6ம் தேதி வெளியானது.

* ஆகஸ்ட் 13ம் தேதி நயன்தாரா நடித்த 'நெற்றிக்கண்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றியது.


* ஏப்ரல் 26ம் தேதி முழுவதுமாக மூடப்பட்ட தியேட்டர்கள் கொரோனா இரண்டாவது அலை தாக்கம் குறைந்த காரணத்தால் மீண்டும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அரசு அனுமதி அளித்தது.

* ஆகஸ்ட் 23ல் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் செப்டம்பர் 3ம் தேதி முதல் தான் புதிய படங்கள் வெளிவர ஆரம்பித்தன.

* ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் தலா 6 படங்களும், அக்டோபர் மாதத்தில் 7 படங்களும், பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாகின.

* செப்டம்பர் 9ம் தேதி விஜய் சேதுபதி நடித்த 'லாபம்' படம் வெளிவந்து ஏமாற்றத்தைத் தந்தது.

* செப்டம்பர் 10ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படமான 'தலைவி' வெளிவந்தது. இந்தப் படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் போனது திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

* செப்டம்பர் 10ல் சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' படம் ஓடிடியில் வெளிவந்து சுமாரான வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் இடம் பெற்ற ரீமிக்ஸ் பாடலான 'பேரு வச்சாலும்…' பாடல் ரசிகர்களைக் கவர்ந்தது.

* விஜய்சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' படம் செப்டம்பர் 10ம் தேதி டிவியில் நேரடியாக வெளியானது.

* செப்டம்பர் 17ம் தேதி ஓடிடி தளத்தில் வெளிவந்த விஜய் சேதுபதி நடித்த 'அனபெல் சேதுபதி' படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வரவேற்பைப் பெறத் தவறியது.

* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமான 'ப்ரண்ட்ஷிப்' படம் செப்டம்பர் 17ம் தேதி வெளியானது. ஆனால், படம் வெற்றி பெறவில்லை.

* கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளிவந்த படங்களில் விஜய் ஆண்டனி நடித்து செப்டம்பர் 17ல் வந்த 'கோடியில் ஒருவன்' படம்தான் முதல் வெற்றிப் படம் என அப்படக்குழுவினர் அறிவித்தனர்.

* மோகன்ஜி இயக்கத்தில், ரிச்சர்ட் நடித்து அக்டோபர் 1ல் வெளிவந்த 'ருத்ர தாண்டவம்' படம் சர்ச்சைக்குரிய கதையுடன் வந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது.

* சிவகார்த்திகேயன் நடித்து அக்டோபர் 9ல் வெளிவந்த 'டாக்டர்' படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

* சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடித்து செப்டம்பர் 14ல் வெளிவந்த 'அரண்மனை 3' படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றது.

* சமுத்திரக்கனி இயக்கி, நாயகனாக நடித்த 'விநோதய சித்தம்' படம் அக்டோபர் 13ல் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

* அக்டோபர் 14ல் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி நடித்த 'உடன்பிறப்பே' ஓடிடி தளத்தில் வெளியாகி, மிகச் சுமாரான வரவேற்பையே பெற முடிந்தது.

* அக்டோபர் 22ல் ஓடிடி தளத்தில் வெளியான, ஹரிஷ்கல்யாண், பிரியா பவானிசங்கர் நடித்த 'ஓ மணப்பெண்ணே' இளைஞர்களைக் கவர்ந்தது.


* நவம்பர் 1 முதல் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

* சூர்யா நடித்து நவம்பர் 2ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கூடவே, வன்னியர்களை தரக்குறைவாக சித்தரித்ததாக கடும் எதிர்ப்புகள் எழுந்தது.

* தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4ம் தேதி ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த', விஷால் நடித்த 'எனிமி' ஆகிய படங்கள் வெளிவந்தன.

* சந்தானம் நாயகனாக நடித்த 'சபாபதி' படம் நவம்பர் 19ம் தேதி வெளியாகி வெற்றி பெறாமல் போனது.

* சில பல போராட்டங்களுக்குப் பின் சிம்பு நாயகனாக நடித்த 'மாநாடு' படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி வெற்றியும், வரவேற்பையும் பெற்றது.

* ஜிபி பிரகாஷ்குமார் நடித்த 'பேச்சுலர், ஜெயில்' அடுத்தடுத்த வாரங்களில் டிசம்பர் 3, டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் வெளியானது. 'பேச்சுலர்' படம் வெற்றிப்படம் என படக்குழு அறிவித்தது.


* வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 31ம் தேதி 10க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்தன. வருடத்தின் முதல் நாளான ஜனவரி 1லும் படங்கள் வெளிவந்தன, கடைசி நாளான டிசம்பர் 31லும் படங்கள் வெளிவந்தன.

* நடிகர் ரஜினிகாந்திற்கு திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

* நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

* தன்னை 'தல' என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தினார் நடிகர் அஜித்.


* நகைச்சுவை நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

* இயக்குனர்கள் ஜிஎன் ரங்கராஜன், எஸ்பி ஜனநாதன், கே.சொர்ணம், சி.வி.சசிகுமார், கோவி.மணிசேகரன், ஆச்சார்யா ரவி, பாடலாசிரியர்கள் புலமைப்பித்தன், பிறைசூடன், நடிகை சித்ரா ஆகியோர் மரணம்.

* கொரோனா காரணமாக இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, எஸ்.தயாளன், தயாரிப்பாளர்கள் கே.வி.பாலு, சேலம் சந்திரசேகர், பாபுராஜா, நடிகர்கள் நிதிஷ் வீரா, கில்லி மாறன், வெங்கட் ஆகியோர் மரணம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2021ம் ஆண்டின் ‛டாப் 10' பாடல்கள்2021ம் ஆண்டின் ‛டாப் 10' பாடல்கள் 2021 - டாப் 10 திரைப்படங்கள்… 2021 - டாப் 10 திரைப்படங்கள்…

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in