Advertisement

இளையராஜா

Birthday
02 Jun 1943 (Age )

தமிழ் சினிமாவில் கர்நாடக சங்கீதமும், வெஸ்டர்ன் சங்கீதமும் ஒலித்து கொண்டிருந்த சமயத்தில் கிராமத்து மனம் கமழும் இசையை புகுத்தியவர் இளையராஜா. தேனி மாவவட்டம், பண்ணைபுரத்தில், 1943ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி பிறந்த இளையராஜா, தனது சகோதர்களுடன் சென்னைக்கு வந்தார். அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான இளையராஜாவுக்கு அதன்பின்னர் எல்லாமே ஏறுமுகமாக அமைந்தது. தொடர்ந்து பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இளையராஜாவின் பாடல்களுக்காகவே பல படங்கள் 100 நாட்கள் கடந்ததுண்டு.

கிராமத்து இசை மட்டுமல்லாது கர்நாடகம், வெர்ஸ்டன் என எல்லா இசைகளிலும் ஜொலித்தார் இளையராஜா. தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை சுமார் 5000 பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். பாலா இயக்கும் பரதேசி படம், இளையராஜாவுக்கு 1000-மாவது படமாகும்.

பத்மபூஷண் விருது, 4 முறை தேசிய விருது, பல மாநில விருதுகள், சர்வதேச விருதுகள் உள்ளிட்ட எக்கச்சக்கமான விருதுகளை குவித்துள்ளார் இளையராஜா.

இளையராஜாவின் மனைவி ஜீவா இறந்துவிட்டார். இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என மூன்று வாரிசுகள் உள்ளனர். மூவரும் இசையமைப்பாளர்களாகவும், பாடகராகவும் உள்ளனர்.

மேலும் பிறந்தநாள் காணும் நட்சத்திரங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in