1967ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி, சென்னையில் பிறந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். தன் அப்பா இசை துறையில் இருந்ததால் அவரைப்போலவே தானும் இசையின் மீது நாட்டம் கொண்டு இசை துறைக்கு வந்தார். ஆரம்பகாலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை மேதைகளின் உதவியாளராக பணியாற்றினார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை திறமையை பார்த்து வியந்த இயக்குநர் மணிரத்னம், தனது ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். முதல்படமே சூப்பர் ஹிட்டாக, அனைவரின் பார்வையும் ரஹ்மான் பக்கம் திரும்பியது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்தவர் ஹாலிவுட் படத்திற்கும் இசையமைக்க தொடங்கினார். அவர் இசையமைத்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்த. தமிழ் கலைஞனின் புகழ் உலகம் முழுக்க பரவியது. ஆஸ்கர் விருது மட்டுமல்லாது .கோல்டன் குளோப், கிராமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். நான்கு முறை தேசிய விருதுகள், இந்தியாவின் பல்வேறு மாநில விருதுகள், பிலிம்பேர் விருதுகள், பத்மஸ்ரீ போன்ற விருதுகளையும் குவித்துள்ளார்.