1000 கோடி நிகர வசூலைக் கடந்த 'துரந்தர் 2' | காதலைப் போல பிரேக் அப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் : காந்தி கிருஷ்ணா | பிளாஷ்பேக் : 1989ல் ஒரு வெற்றித் தீபாவளி | பிளாஷ்பேக் : தொழில்நுட்ப ரீதியாக விமர்சிக்கப்பட்ட முதல் படம் | நான்கே நாட்களில் 50 கோடியை நெருங்கும் 'வாழ 2' | விமான நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ராஷ்மிகா | 250 பேரில் இருந்து தேர்வானவர் மாளவிகா மனோஜ் : சொல்கிறார் மீரா கதிரவன் | சம்மர் ட்ரீட் உறுதி ; அதிர வைக்கும் 'பேட்ரியாட்' டீசர் | ஸ்கூபா டைவிங்கில் அசத்தும் சோபிதா துலிபாலா | மனைவியை பிரிந்தது ஏன் ? பிரிவுக்குப் பின் இணைந்த பிரியதர்ஷன் பதில் |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பின்னணி பாடகி சுனிதா. டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. பின்னர் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகள் ஸ்ரேயா பாடகியாக இருக்கிறார்.
சுனிதா தற்போது 2வது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரப்பனேனி என்பவரை காதலித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தன் காதலை முறைப்படி அறிவித்து திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். அதன்படி இவர்கள் திருமணம் நேற்று ஐதராபாத் அருகே உள்ள ஸ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.