Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : 1989ல் ஒரு வெற்றித் தீபாவளி

06 ஏப், 2026 - 11:09 IST
எழுத்தின் அளவு:
Flashback-A-successful-Diwali-in-1989
Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி பண்டிகையில்தான் அதிக படங்கள் வெளிவரும். அவற்றில் ஒரு சிலதான் தோல்வி அடையும். ஆனால் சற்று வித்தியாசமாக 1989ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான அத்தனை படங்களும் ஹிட்டானது.

ரஜினி நடித்த 'மாப்பிள்ளை', அவருடன் அமலா, ஸ்ரீவித்யா, நிழல்கள் ரவி, எஸ்.எஸ்.சந்திரன் ஆகியோர் நடித்தனர். ராஜசேகர் இயக்கினார். இசை இளையராஜா. 150 நாட்கள் ஓடியது

கமல் நடித்த 'வெற்றி விழா'. அவருடன் அமலா, பிரபு, குஷ்பூ ஆகியோர் நடித்தனர். பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். சிவாஜி புரொடக்ஷன் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 175 நாட்கள் ஒடி வெள்ளி விழா கொண்டாடியது.

சத்யராஜ் நடித்த 'வாத்தியார் வீட்டு பிள்ளை'. பி.வாசு இயக்கினார். ஷோபனா, ராஜேஷ், ஸ்ரீவித்யா உள்ளிட்டோர் நடித்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். 50 நாட்கள் ஓடிய படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.

ராமராஜனின் 'தங்கமான ராசா'. கனகா, கவுண்டமணி, செந்தில், வினுசக்கரவர்த்தி, காந்திமதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். 100 நாள் படம்.

விஜயகாந்தின் 'ராஜநடை'. அவருடன் சீதா, கவுதமி நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்திருந்தார். பி.வாசு இயக்கி இருந்தார். 75 நாள் படம்.

கே.பாலச்சந்தரின் 'புதுப்புது அர்த்தங்கள்'. ரஹ்மான், சித்தாரா, கீதா நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைத்திருந்தார். 100 நாள் படம்.

இந்த படங்கள் தவிர சத்யராஜ் நடித்த 'திராவிடன்', ராமராஜன் நடித்த 'அன்புக்கட்டளை' படங்களும் வெளியானது. இவைகள் அதிகநாள் ஓடாவிட்டாலும் தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படங்களானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிளாஷ்பேக் : தொழில்நுட்ப ரீதியாக விமர்சிக்கப்பட்ட முதல் படம்பிளாஷ்பேக் : தொழில்நுட்ப ரீதியாக ... காதலைப் போல பிரேக் அப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் : காந்தி கிருஷ்ணா காதலைப் போல பிரேக் அப்பையும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap