ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மேடை நாடக கலைஞரான தாமரை செல்வி விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்ட தாமரை, தனது திறமையான ஆட்டத்தால் டாப் 10-ல் இடம்பிடித்தார். தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்து கொண்டு 4வது இடத்தை பிடித்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரையின் புகழ் பட்டித்தொட்டியெங்கும் பரவ வெள்ளித்திரை அவருக்கு அதிர்ஷ்ட கதவை திறந்தது. தற்போது தாமரை 'ஆழி' உள்ளிட்ட இன்னும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் சின்னத்திரை சீரியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். விஜய் டிவியின் ஹிட் தொடரான 'பாரதி கண்ணம்மா' க்ளைமாக்ஸை எட்டியுள்ளது என்றே சின்னத்திரை வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. ஆனால், தற்போது இந்த தொடரில் தாமரை செல்வி என்ட்ரி கொடுத்துள்ளாராம். அதை உறுதிப்படுத்துவது போல் தாமரை செல்வியும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.