பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

'வலிமை அப்டேட், வலிமை அப்டேட்' என அஜித் ரசிகர்கள் எங்கெல்லாமோ கேட்டு வைத்தார்கள். ஆனாலும், படக்குழு அசரவே அசராமல் அந்த 'அப்டேட்' கொடுப்பதை தள்ளி வைத்துக் கொண்டே வந்தது. இப்போது முதல் பார்வை போஸ்டரை மோஷன் போஸ்டராக வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் அது எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் வரும் என்கிறார்கள். இதன் மூலம் அஜித் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்கு ஒரு முடிவு வரப் போகிறது.
வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், அஜித், ஹுமா குரேஷி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் இப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு வரவழைப்பத்தில் இப்படத்திற்கு மிக முக்கிய பங்கு இருக்கப் போவதாக தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது ஆசையை நிறைவேற்றும் விதத்தில் படக்குழுவும் ஆகஸ்ட் வெளியீடாக படத்தை வெளியிடும் அறிவிப்பையும் அப்டேட்டுடன் வெளியிடுவார்களா என்பது திரையுலகினரின், ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.