ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை | எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' |

தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார். அதுவும் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்து ஒரு கட்டத்திற்கு பிறகு ராஷ்மிகா எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இவரது நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் ராஷ்மிகா நடிப்பை கொண்டாடினர்.
இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு 'மிக விரைவில்' என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் 'தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?' என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய காதல்” என்று பதிலளித்துள்ளார்.




