ராணுவ வீரராக சசிகுமார் நடிக்கும் பீரியட் டிராமா படப்பிடிப்பு நிறைவு | பாலா படத்தில் விஜய்சேதுபதி: கதை மாரி செல்வராஜ்? | 'மாளிகைப்புரம்' இயக்குனரின் அடுத்த படைப்பு: வைபவ், மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்கள் | மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த பாக்யஸ்ரீ போர்ஸ் | 'எல்லம்மா' தெய்வ வழிபாடு : தேவிஸ்ரீபிரசாத் நெகிழ்ச்சி | உலக டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் 'டிசி' | 'கருப்பு': 300 கோடி வசூலைக் கடந்து சாதனை!! | டபுள் பிளாக்பஸ்டர் ஆன 'திரிஷ்யம் 3' | இனி கொஞ்ச நாளைக்கு மவுனம்: அரசியல் பேச்சு குறித்து சமுத்திரக்கனி விளக்கம் | முதல்வர் விஜயை சந்திக்க காத்திருக்கிறேன்.. விக்னேஷ் சிவன் நல்ல மனிதர்: நடிகை சோனா |

மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகி பாபு மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளியான படம் 'கர்ணன்'.
கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் இப்படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கும் என்ற பயம் திரையுலகினரிடத்தில் இருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வந்ததாக தியேட்டர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.
மாநரங்களிலும், நகரங்களிலும், மற்ற ஊர்களிலும் கடந்த இரண்டு நாளாக விடுமுறை என்பதால் மக்கள் படத்தைப் பார்க்க வந்துள்ளார்கள். 50 சதவீத இருக்கைகள்தான் என்றாலும் அவை அனைத்துமே பல காட்சிகளுக்கு நிரம்பிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று நாள் வசூலாக 20 முதல் 25 கோடி வரை வசூலித்திருக்கும் என்று வியாபார வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் லாபத்தை நோக்கித் தாராளமாகப் பயணிக்கும் என்கிறார்கள்.
அதேசமயம் 'கர்ணன்' படம் சாதிய ரீதியாக சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு குறிப்பிட்ட சாரார் இந்தப் படத்தை முடிந்த அளவிற்கு நெகட்டிவ்வாக விமர்சித்து சர்ச்சைகளை ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பதாக படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவிப்பதை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.




