ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் |

கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் ஜெகன் சக்தி இயக்கத்தில் அக் ஷய் குமார் நடித்து, வெளிவந்த படம் 'மிஷன் மங்கள்'. வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்தனர். செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவது தொடர்பான கதையில் உருவாகி இருந்தது. படமும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது இந்த படத்தின் இயக்குனர் ஜெகன் சக்தி, நடிகர் தனுஷை மனதில் வைத்து ஒரு புதிய கதையை உருவாக்கி வருகிறாராம். இது மட்டும் அல்லாமல் அந்த கதை உடன் தனுஷை அணுகி பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் கைவசமாக அரை டஜன் படங்கள் உள்ளன. அதையெல்லாம் மீறி இந்த படத்திற்கு அவர் கால்ஷீட் தருவாரா என்பது இனி தான் தெரிய வரும்.