சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து 2016ம் ஆண்டு வெளியான படம் 'கபாலி'. அப்படத்தில் இளம் பெண்ணுக்கு அப்பா கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்தார். வெள்ளை தாடி, மீசை, முடி, கூலிங்கிளாஸ் என அவருடைய தோற்றம் வயதானவராக இருந்தாலும் அப்படத்தில் மிகவும் ஸ்டைலாக இருந்தது. அந்தத் தோற்றம் ரஜினி ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக இருந்தது.
இன்று சென்னையில் நடைபெற்ற 'வேட்டை நாய்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'கபாலி' கெட்டப்பில் நடிகர் ராம்கி வந்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். 1987ம் ஆண்டு வெளியான 'சின்னப் பூவே மெல்லப் பேசு' படத்தில் கதாநயாகனாக அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் ராம்கி. அதன்பின் அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கடைசியாக விஷால் நடித்த 'ஆக்ஷன்' படத்தில் நடித்தார். தற்போது 'வேட்டை நாய்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.