லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
காவலன், தெய்வத்திருமகள், முகமூடி, மனிதன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் மலையாள குணச்சித்திர நடிகரான கிருஷ்ணகுமார். இவருக்கு மொத்தம் நான்கு மகள்கள்.. இதில் மூத்த மகளான ஆஹானா கிருஷ்ணா என்பவர் தற்போது மலையாள படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த 2018ல் வெளியாகி வரவேற்பை பெற்ற லூக்கா என்கிற படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டை பெற்றவர்.
தற்போது தனக்கு கொரோனா பாசிடிவ் என்கிற தகவலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் ஆஹானா கிருஷ்ணா. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில நாட்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில் பாசிடிவ் என ரிசல்ட் வந்தது. கடந்த இரண்டு நாட்களாக என்னை தனிமைபடுத்திக்கொண்டு அதை உற்சாகமாக அனுபவித்து வருகிறேன். இதில் குணமடைந்து கோவிட் நெகடிவ் என்கிற ரிசல்ட்டை பெறுவேன் என நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார் ஆஹானா கிருஷ்ணா.