'ஜனநாயகன்' தீர்ப்பு, அடுத்த வாரம் தான்….??? | இயக்குனர் பாண்டிராஜின் பொறுமையை சோதித்த ஜெயராம்-ஊர்வசி | 'திரவுபதி 2' படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | அமிதாப்பச்சன் வீட்டில் தங்க கழிப்பறையா : பரபரப்பு கிளப்பிய பாலிவுட் நடிகர் | அமைச்சர் வாக்குறுதி ; வேலை நிறுத்தத்தை கைவிட்ட மலையாள திரையுலகம் | ஊர்வசியின் சகோதரர் நடிகர் கமல் ராய் காலமானார் | பிளாஷ்பேக் : இளவரசு நடிகரானது இப்படித்தான் | பிளாஷ்பேக் : எம்ஜிஆரை காப்பாற்றிய நடன இயக்குனர் | கோட்டயத்தில் நடந்த உண்மை சம்பவம்: தலைவர் தம்பி தலைமையில் இயக்குனர் பேட்டி | உடற்கேலி : ஈஷா ரெப்பா வருத்தம் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி 300 கோடி வசூலைக் கடந்த படம் 'காந்தாரா சாப்டர் 1'. சரித்திரக் காலப் படமாக உருவான இந்தப் படத்தில் அரங்க அமைப்பு, விஎப்எக்ஸ், ஆடை வடிவமைப்பு உள்ளிட்டவை ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.
ஒரு பக்கம் மன்னர் குடும்பத்தினருக்கான ஆடை வடிவமைப்பு, மறுபக்கம் காந்தாரா பழங்குடியினருக்கான ஆடை வடிவமைப்பு என இருவேறு விதமான ஆடை வடிவமைப்பு படத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பை ரிஷப் ஷெட்டியின் மனைவி பிரகதி ஏற்று சிறப்பாகச் செய்துள்ளார். இதற்கு முன்பு 'காந்தாரா, பெல்பாட்டம்' ஆகிய கன்னடப் படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளார்.
படம் குறித்து, “காந்தாரா சாப்டர் 1-ன் ஒரு பகுதியாக இருப்பது உண்மையிலேயே மறக்க முடியாத பயணமாக இருந்தது. இவ்வளவு ஆழமான, மூலமான, மற்றும் தெய்வீகமான கதைக்கு உடைகளை வடிவமைப்பது வேலையை விட உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த அற்புதமான தரிசனத்தின் சிறிய பகுதியை நெய்ததற்கு நன்றி,” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாது 'காந்தாரா மற்றும் காந்தாரா சாப்டர் 1' ஆகிய படங்களில் கொஞ்ச நேரமே வரும் சிறப்புத் தோற்றத்திலும் அவர் நடித்துள்ளார்.