ஏஐ ஆபத்து, சட்ட நடவடிக்கை தேவை : ஷ்ரத்தா ஸ்ரீநாத். | தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா. கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் மற்ற மதக் கோவில்களுக்கும் சென்று வழிபடுபவர். திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று வழிபட்டது குறித்தும் இதற்கு முன்பு பதிவிட்டிருந்தார்.
தற்போது பஞ்சாப் மாநிலத்திற்குப் பயணம் சென்றது குறித்தும் பொற்கோவிலில் தரிசனம் செய்தது குறித்தும் பதிவிட்டுள்ளார்.
“நான் எங்கிருந்து தொடங்குவது, ஒரு குறுகிய முற்றிலும் ஆச்சரியமான பயணம். …
பொற்கோவில் என்ன ஒரு ஈர்ப்பு. அமைதியான அழகான ஒரு சன்னதி. அனைத்து மதங்களை சேர்ந்த மக்களையும் வரவேற்கிறது. சுதந்திரத்தின் போது எல்லைகளில் இருந்த மக்கள் எதிர்கொண்ட மிகப் பெரிய கஷ்டங்களை 'பார்ட்டிஷன் மியுசியம்' உண்மையில் என் கண்களைத் திறந்தது. இது வாகா எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. ஒரு தனித்தவதமான 'பிஎஸ்எப் சந்திப்புகள்' அரங்கம் என்று மட்டுமே விவரிக்கக் கூடிய இடத்தில் பல இந்தியர்கள் உற்சாகமாக இருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், சாப்பிடுவதில் நான் பிஸியாக இருந்தேன் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவில்லை. லஸ்ஸி, அம்ரிட்சர் குல்சா, சோலே, எனது அபிமான ஜிலேபி.
கடைசியாக ஒன்று... ஷாப்பிங். எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வண்ணமயமான புல்காரி துணிகள் கண்களுக்கு விருந்து. விலைகளுமே உண்மையாக நன்றாகவே இருந்தன. இந்தப் பயணத்திற்குப் பிறகு சீக்கிய சமூகத்தின் மீதான எனது மரியாதையும் அபிமானமும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.