ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
இந்திய சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகைகள் ஆன்மிகப் பற்று கொண்டவர்கள். மற்ற மதத்தைச் சார்ந்த நடிகைகள் கூட இந்து மதக் கடவுள்களை வழிபடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நயன்தாரா, சமந்தா ஆகியோர் அதற்கு உதாரணம்.
'சீதா ராமம், குஷி' படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடமும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்கூர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஜக்தேஷ்வர் என்ற இடத்தில் உள்ள இந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாதளத்தில் பதிவிட்டுள்ளார்.'ஆனந்தம்' என்ற ஒற்றை வார்த்தையுடன் அந்தப் படங்களைப் பதிவு செய்துள்ளார்.
அவருடைய பக்திமயமான புகைப்படங்களுக்கு ஒரு மில்லியனுக்கும் மேலான லைக்குகள் கிடைத்துள்ளது. நடிகையரின் ஆடை, அலங்கார புகைப்படங்களுக்கு மட்டும் ரசிகர்கள் லைக் செய்வதில்லை, அவர்களது ஆன்மிக புகைப்படங்களுக்கும் லைக் செய்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.