ஜனநாயகன் வழக்கு; சூடுபிடிக்கும் வாதங்கள்; இன்றே தீர்ப்பு? | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை | யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் |

விஜயசேதுபதி-த்ரிஷா நடித்த 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் தற்போது இயக்கியுள்ள படம் ‛மெய்யழகன்'. கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார்த்தி - அரவிந்த்சாமி இருவரது ஜாலியான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக, கார்த்தி அரவிந்த்சாமியை பார்த்து, அத்தான் நீங்க பீர் அடிப்பீங்களா? என்று கேட்க, அதற்கு அரவிந்த்சாமி வேண்டாம் என்று சொல்வது உள்பட சில உரையாடல் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த காட்சிகளை பார்க்கும்போது இந்த படம் ஒரு குடும்ப கதையில் உருவாகி இருப்பது தெரிகிறது. இப்படம் இம்மாதம் 27ம் தேதி திரைக்கு வருகிறது.




