உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' | பிரதமர் ரசித்த திருவாசக பாடல்: ஜனவரி 22ல் வெளியிடுகிறார் ஜி.வி.பிரகாஷ் | மீண்டும் சூர்யா, சுதா கொங்கரா கூட்டணி | ஹீரோயின் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை: 'மாயபிம்பம்' பட இயக்குனர் வேதனை | யானையை தத்தெடுத்த சிவகார்த்திகேயன் | 'ஜெயிலர் 2' கடைசி கட்ட படப்பிடிப்பு: கேரளா சென்றடைந்தார் ரஜினிகாந்த் | ஆண்டின் தொடக்கம் இப்படி இருக்கிறது; சூப்பர் ஹிட்டுக்காக காத்திருப்பு | தெலுங்கில் 3 பொங்கல் படங்கள் 100 கோடி வசூல் | ‛ஜே.பேபி' இயக்குனருடன் கைகோர்த்த மணிகண்டன் | தொடரும் பட இயக்குனருடன் மீண்டும் இணைந்த மோகன்லால் : கதாநாயகியாக நடிக்கும் மீரா ஜாஸ்மின் |

தமிழ் சினிமாவில் அந்தக்கால கிளாசிக் படங்கள் என்றால் சந்திரலேகா, ஸ்ரீவள்ளி, மதுரை வீரன், வீரபாண்டிய கட்டபொம்மன், தில்லானா மோகனாம்பாள், அடிமைப்பெண் இப்படியான படங்கள்தான் நினைவுக்கு வரும். இந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய 'ஆரவல்லி' ஏனோ இடம் பெறவில்லை.
ஆண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் பெண்கள் பார்த்துக் கொள்வார்கள், பெண்கள் செய்யும் வேலைகளை எல்லாம் ஆண்கள் செய்ய வேண்டும். ஆண்கள் இனி பெண்களுக்கு அடிமைகள். இப்படி ஒரு சட்டம் நாட்டில் இருந்தால் எப்படி இருக்கும் அதுதான் 'ஆரவல்லி' படம்.
மகாபாரதத்தின் கிளை கதைகளில் ஒன்றுதான் ஆரவல்லி சூரவல்லியின் கதை. பஞ்சபாண்டவர்களுக்கும் துரியோதனன் சகோதர்களுக்கும் பகை ஏற்படாமல் ஒற்றுமையாக வாழ்ந்த காலத்தில் துவாரகையிலிருந்து வந்த கிருஷ்ணன் ஒரு சேதி சொன்னார். அதாவது, “ஆரவல்லி, சூரவல்லி, என்ற பெண்கள் நெல்லூரு பட்டணம் எனப்பட்ட ஆரவல்லி நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் மொத்தம் 7 பேர். மாயவித்தைகள் தெரிந்த அவர்கள் வஞ்சகமான போட்டிகள் வைத்து ஆண்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார்கள். அவர்களை அடக்கி அடிமையானவர்களை விடுதலை செய்தால் உங்களுக்கு கீர்த்தி உண்டாகும்”. என்று சொல்கிறார். உடனே பீமன் கிளம்புகிறான். பீமனால் அதை செய்ய முடிந்ததா என்பதுதான் புராணக் கதை.
இதை அந்த காலத்திலேயே பிரமாண்டமாக தயாரித்தது மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம். மைனாவதி, ஜி.வரலட்சுமி, எஸ்.ஜி.ஈஸ்வர், ஏ.கருணாநிதி, எம்.என்.கிருஷ்ணன், கே.சாய்ராமன், காக்கா ராதாகிருஷ்ணன், சட்டம்பிள்ளை வெங்கட்ராமன், ஆழ்வார் குப்புசாமி, ஜெயக்கொடி கே.நடராஜன், டி.என்.சிவதாணு, எஸ்.எஸ்.சிவசூரியன், எஸ்.மோகனா, சிங்காரம், வி.கோபாலகிருஷ்ணன், எஸ்.எம்.திருப்பதிசாமி, ஜி.சகுந்தலா, எம்.சரோஜா, டி.பி.முத்துலட்சுமி உள்பட பலர் நடித்திருந்தனர். கிருஷ்ணா ராவ் இயக்கி இருந்தார், ஜி.ராமநாத ஐயர் இசை அமைத்திருந்தார். 1957ம் ஆண்டு வெளிவந்தது.




