மகன் பட அறிவிப்பும் வந்தாச்சு, அப்பா பட அறிவிப்பு எப்போது வரும் ? | மகளுக்கு திருமணம் : பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு, சுந்தர் சி | ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு 'காப்பிரைட்' வழக்கு | சூர்யாவின் முதல் 300 கோடி, அப்படியே தொடர்வாரா...? | நடிகர் அஜித்தின் தாயார் காலமானார் | பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! |

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள படம் “மதிமாறன்”. ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், 'ஆடுகளம்' நரேன், பாவா செல்லதுரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில், வெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதிமாறன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர், இசை உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் படத்தை வெளியிட உள்ளனர்.