பிகினி தோற்றம் : கிரித்தி சனோன் வெளியிட்ட தகவல் | ராம்சரண் மனைவியிடம் இருந்து திரிஷாவுக்கு பறந்து வந்த பரிசுப் பெட்டகம் | ஜனநாயகன் லீக் விவகாரம் : மேலும் ஒருவர் கைது | 'மாம் 2' படப்பிடிப்பில் குஷி கபூரின் நடிப்பால் அதிருப்தியில் படக்குழுவினர் | அம்மா இறந்த ஒரு வாரத்திற்குள் ரேஸிங்கில் இறங்கிய அஜித் குமார் | ஒருவர் சம்பாதித்தால் போதும் ; மகனின் மனோபாவம் குறித்து மோகன்லால் பெருமிதம் | 'திரிஷ்யம்' நடிகையின் புகாரை விசாரிக்க ஐவர் குழு அமைத்த ஸ்வேதா மேனன் | சத்ரபதி சிவாஜி டீசர்ட் அணிந்து நடனமாடியதற்கு மன்னிப்பு கேட்ட ஜெனிலியாவின் கணவர் | வெளி மாநிலங்களில் 70 கோடி வசூலித்த 'கருப்பு' | ஓடிடியில் மீண்டும் 'துரந்தர்': இந்த வாரம் மிஸ் பண்ணிடாதீங்க...! |

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் சிரஞ்சீவி தற்போதும் பிஸியான நடிகராக சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் சிரஞ்சீவி. அப்போது முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக அவர் பேசும்போது, தான் அப்படி மருத்துவ பரிசோதனை செய்து கொண்டபோது நாளடைவில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய சில காரணிகள் இருப்பது தெரிய வந்ததாகவும் உடனடியாக சிறிய அறுவை சிகிச்சை மூலம் அவை அகற்றப்பட்டதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து இந்த செய்தி சிரஞ்சீவி கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது போலவும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பது போலவும் வெளியாக துவங்கின. சிரஞ்சீவியின் கவனத்திற்கு இது வந்ததும் உடனடியாக தனது சோசியல் மீடியா பக்கம் மூலமாக இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற விதமாகத்தான், அப்படி ஒரு மருத்துவ பரிசோதனையை நான் செய்து கொண்டபோது முன்கூட்டியே புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய காரணிகளை கண்டறிய முடிந்தது என்றும் கொஞ்சம் நாட்கள் தாமதம் ஆகியிருந்தால் அது புற்றுநோயாக மாறி இருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருந்திருக்கும் என்பதையும் உணர்த்தும் விதமாகத்தான் நான் பேசினேன். ஆனால் நானே புற்றுநோயால் பாதிக்கப்பட்டது போன்று செய்திகள் தவறாக வெளியாகி வருகின்றன. தயவுசெய்து இப்படி செய்திகள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிரஞ்சீவி.




