லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் அதையடுத்து பிரபுதேவா நடிப்பில் ‛பஹீரா' என்ற படத்தை இயக்கி உள்ளார். ஆனால் இந்த படம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு சில பல காரணங்களால் திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்தது.
இந்த நிலையில் தற்போது பஹீரா படத்தை வருகிற மார்ச் மூன்றாம் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பிரபு தேவாவை இதுவரை பார்க்காத ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என்றும் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.